க்ரைம்

சென்னை | மனைவியுடன் தகராறால் விபரீத முடிவு: மகளை கொலை செய்து நேபாள காவலாளி தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: மனைவியின் தவறான நடத்​தை​யால் ஏற்​பட்ட வேதனை​யில், மகளை கொலை செய்​து​விட்டு நேபாள காவலாளி தற்​கொலை செய்​து​கொண்​டார்.

சென்னை சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள பள்ளி ஒன்​றில் நேபாள நாட்​டைச் சேர்ந்த லட்​சுமணன் பிர​சாத் (40) காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். அவர் மனை​வி, 2 மகள்​களு​டன் பள்ளி வளாகத்​தில் உள்ள அறை ஒன்​றிலேயே வசித்து வந்​தார்.

மனை​வி​யின் நடத்​தை​யில் சந்​தேகம் கொண்​ட​தால் கணவன், மனைவி இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது. கடந்த 6-ம் தேதி​யும் இதே​போல் தகராறு ஏற்​பட்​ட​தால், கோபம் அடைந்த மனைவி இளைய மகளை அழைத்​துக் கொண்டு வெளி​யேறி​னார். கடந்த 10 நாட்​களாக மூத்த மகளான கீதாவுடன் (9) லட்​சுமணன் இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை கீதாவை கழுத்தை நெறித்து கொலை செய்​து, தூக்​கில் தொங்​க​விட்​டுள்​ளார். தொடர்ந்து அதே கயிற்​றின் மற்​றொரு முனை​யில் தானும் தூக்​கிட்​டுக்​கொண்​டார்.

இதைக் கண்ட அங்​கிருந்​தவர்​கள் உடனடி​யாக அவரை மீட்​டனர். தொடர்ந்து இதுகுறித்து சிந்​தா​திரிப்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விரைந்து சென்று கீதா​வின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும் அதே மருத்​து​வ​மனைக்கு லட்​சுமணனை​யும் அனுப்​பினர். அங்கு சிகிச்​சைப் பலனின்றி அவர் நேற்று முன்​தினம் நள்​ளிரவு இறந்​தார். இந்த விவ​காரம் தொடர்​பாக சிந்​தா​திரிப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

முதல் கட்​ட​மாக லட்​சுமணனின் மனை​வி​யிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அவர் தனது கணவர் வீடியோ காலில் பேசி​யபடி மூத்த மகளை கொலை செய்து தூக்​கில் தொங்​க​விட்​டு, அவரும் தற்​கொலை செய்து கொண்​ட​தாக தெரி​வித்​துள்​ளார்.

போலீஸ் இதுகுறித்து கூறும்​போது, ``லட்​சுமணனின் மனைவி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ரயில்வே அதி​காரி​கள் குடி​யிருப்​பில் சமையல் வேலை செய்து வந்​துள்​ளார். அவருக்​கும் அங்கு தண்​ணீர் கேன் போடும் நேபாள நாட்​டைச் சேர்ந்த ஒரு​வருக்​கும் திரு​மணத்தை மீறிய உறவு இருந்​த​தாக தெரி​கிறது.

இதையறிந்த லட்​சுமணன் மனை​வியைக் கண்​டித்​த​தால், அவர் கோபித்​துக்​கொண்டு மகள்​களை அழைத்​துக் கொண்டு வெளி​யேற முயன்​ற​போது, தடுத்​த​தால் ஒரு மகளை மட்​டும் விட்​டு​விட்டு சென்​றுள்​ளார்.

அவர் நேபாளம் செல்​லாமல் அவரது ஆண் நண்​பருடன் நுங்​கம்​பாக்​கத்​திலேயே இருப்​பதை அறிந்த வேதனை​யில் லட்​சுமணன் இவ்​வாறு செய்​துள்​ளார் என்று போலீ​ஸார் கூறினர். இது தொடர்​பாக தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT