ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்
Updated on
1 min read

சென்னை: ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா வழக்​கறிஞர் நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.

அமலாக்​கத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பை சுட்​டிக்​காட்​டி, ‘ரூ.258 கோடி மதிப்​பிலான போதைப் பொருள் கடத்​தலில் மூளை​யாக செயல்​பட்ட ஜான் பிரிட்​டோ, தவெக அரசின் பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் நெருங்​கிய உறவினர் என்ற அதிர்ச்​சி​யூட்​டும் உண்மை அம்​பலா​மாகி​யுள்​ளது’ என திமுக தலை​வர் ஸ்டா​லின், கட்​சி​யின் எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருந்​தார்.

இது தனது நற்​பெயருக்கு களங்​கம் விளை​விப்​ப​தாக கூறி ஆதவ் அர்​ஜுனா தரப்​பில் திமுக தலை​வர் ஸ்டா​லினுக்​கும், திமுக ஐ.டி. பிரிவுக்​கும் வழக்​கறிஞர் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

ஆதவ் அர்​ஜுனா சார்​பில் வழக்​கறிஞர்​கள் ஏ.பி.சூரியபிர​காசம், ஆர்​.மோகன் பார்த்​த​சா​ரதி ஆகியோர் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளனர். அதில், ‘அமலாக்​கத் துறை செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்ள ஜான் பிரிட்டோ எனது உறவினர் அல்ல.

இது சம்​பந்​த​மாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்​களில் விளக்​கம் அளித்​துள்​ளார். திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட பதிவுக்கு நிபந்​தனையற்ற மன்​னிப்பு கேட்க வேண்​டும்.

ரூ.1 கோடிமான நஷ்ட ஈடு வழங்க வேண்​டும். தவறி​னால் குற்​ற​வியல் மற்​றும் உரிமை​யியல் சட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும்’ என கூறப்​பட்​டுள்​ளது.

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்
தமிழக சிறைத் துறையில் பணியிட மாற்றங்களை முறைப்படுத்த புதிய வாரியம் அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in