க்ரைம்

ஸ்கூட்டியிலிருந்த பணம், ஆவணங்கள் திருட்டு: 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கூட வாசலில் நிறுத்​தப்​பட்​டிருந்த ஸ்கூட்டியின் டிக்​கியை உடைத்​து, பணம், ஆவணங்​களை திருடிய பிரபல கொள்​ளை​யன் கைது செய்​யப்​பட்​டார்.

சென்​னை, கொளத்​தூர், ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த பெண் இந்து (35). இவர் கடந்த மாதம் 18-ம் தேதி மதி​யம் தனது பிள்​ளை​களை பள்​ளி​யில் இருந்து அழைத்து வர, ஸ்கூட்டியில் அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளிக்கு சென்​றார்.

பள்ளி வளாகத்​துக்​குள் சென்று திரும்பி வந்​த​போது, வாக​னத்​தின் டிக்​கி​யில் வைத்​திருந்த ரூ.26,500 ரொக்​கம், ஏடிஎம் கார்​டு, ஆர்சி புத்​தகம், ஆதார், பான் கார்​டு, வீட்டு சாவி​கள் உள்​ளிட்ட பொருட்​கள் அடங்​கிய பை மர்ம நபரால் திருடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, சிறிது நேரத்​தில் அவரது ஏடிஎம் கார்டை பயன்​படுத்தி ரூ.2,500 எடுக்​கப்​பட்​ட​தாக குறுஞ்​செய்தி வந்​தது. இதுகுறித்​து, இந்து அளித்த புகாரின் பேரில், கொளத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்​த​தில், திருட்​டில் ஈடு​பட்​டது கொளத்​தூர் கண்​ணகி நகரைச் சேர்ந்த பிரதீப் (44) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். முன்​ன​தாக, அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், பிரதீப் அதே பகு​தி​யில் ஒரு டியோ இருசக்கர வாக​னத்​தை​யும், மற்​றொரு இடத்​தில் ஒரு செல்​போனை​யும் திருடி​யிருப்​பது தெரிய வந்​தது.

மேலும், கைது செய்​யப்​பட்ட பிரதீப் மீது ஏற்​க​னவே ஒரு கொலை முயற்சி வழக்​கும், 11 திருட்டு வழக்​கு​களும் நிலு​வை​யில்​ இருப்​பது தெரிய​வந்​தது.

SCROLL FOR NEXT