க்ரைம்

மெரினாவில் ரூ.1 கோடி மெட்ரோ கட்டுமான பொருட்கள் திருட்டு: வட மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா​வில் ரூ.1 கோடி மதிப்​புள்ள மெட்ரோ கட்​டு​மானப் பொருட்​களை திருடிய வழக்​கில் லாரி ஓட்​டுநர், கிளீனர் என வட மாநிலங்​களைச் சேர்ந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மெரினா கலங்​கரை விளக்​கத்​தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. இங்​கிருந்து மெட்ரோ பணிக்கு தேவை​யான சுமார் ரூ.1 கோடி மதிப்​புள்ள கட்​டு​மானப் பொருட்​களை அதன் பொறுப்​பாளர்​கள் லாரி ஓட்​டுநர் மற்​றும் கிளீனரிடம் ஒப்​படைத்​தனர்.

பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு கொண்டு செல்ல அவர்​களுக்கு அறி​வுரை வழங்​கப்​பட்​டு இருந்​தது. ஆனால் குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் லாரி​யில் கொண்டு சென்ற பொருட்​கள் பனகல் பார்க் பகு​திக்கு கொண்டு செல்​லப்​பட​வில்​லை.

அதிர்ச்சி அடைந்த அதி​காரி​கள் சம்​பந்​தப்​பட்ட லாரியை தேடிய​போது கோடம்​பாக்​கம், மீனாட்சி கல்​லூரி அருகே லாரி மட்​டும் தனி​யாக நிறுத்​தப்​பட்​டிருந்​தது தெரிய வந்​தது.

அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்​புள்ள மெட்ரோ கட்​டு​மானப் பொருட்​கள் இல்​லை. யாரோ திருடி​விட்​டு, லாரியை மட்​டும் அங்கு விட்​டுச் சென்​றது தெரிய​வந்​தது. இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட மெட்ரோ அதி​காரி​கள் மெரினா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் மெட்ரோ கட்​டு​மானப் பொருட்​களை திருடிச் சென்​றது அந்த லாரி ஓட்​டுநர் பஞ்​சாப் மாநிலம், குர்​தாஸ்​பூரைச் சேர்ந்த அஜய் மஸி (32), லாரி​யின் கிளீன​ரான உத்​தரப் பிரதேச மாநிலம், ஆசம்​கரைச் சேர்ந்த ஆதித்யா ராய் (19) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​யான பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த மற்​றொரு லாரி ஓட்​டுநர் கோவிந்த் பஸ்​வான் (42) என்​பது தெரிந்​தது.

இதையடுத்து தலைமறை​வாக இருந்த 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். விசா​ரணை​யில் 3 பேரும் சம்​பந்​தப்​பட்ட மெட்ரோ கட்​டு​மானப் பொருட்​களை திருடிச் சென்று மதுர​வாயல் பைபாஸ் மேம்​பாலம் அருகே இறக்கி வைத்​து​விட்டு லாரியை கோடம்​பாக்​கம் பகு​தி​யில் விட்​டுச் சென்​றது தெரிய​வந்​தது.

சிறையிலடைப்பு: இதற்​கிடை​யில் கைது செய்​யப்​பட்ட 3 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT