ஜீவா

 
க்ரைம்

சென்னை | ஜாமீனில் வெளியே வந்து கைவரிசை: கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறிப்பு

16 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

செய்திப்பிரிவு

சென்னை: சிறை​யில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி, வியா​பாரி​யிடம் கத்தியை காட்டி மிரட்டி பணப்​பறிப்​பில் ஈடு​பட்​ட​தாக மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை மாதவரம், பொன்​னி​யம்​மன்​மேடு பகு​தி​யில் குடும்​பத்​துடன் வசித்து வருபவர் வடிவேலு (42). இவர் கொளத்​தூர், வடக்கு மாட வீதி​யில் பழைய இரும்பு பொருட்​கள் வாங்கி விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

கடந்த 9-ம் தேதி மதி​யம் வடிவேலு தனது கடை​யில் இருந்​த​போது, அங்கு வந்த மர்ம நபர் ஒரு​வர் அவரிடம் கத்​தியை காட்டி மிரட்டி பணம் கேட்​டுள்​ளார். அதற்கு வடிவேலு பணம் கொடுக்க மறுத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த அந்த நபர், வடிவேலுவை தாக்​கி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்​துச் சென்​றார். இதுகுறித்து வடிவேலு அளித்த புகாரின்​பேரில், ராஜமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசாரணை நடத்​தினர்.

இதில், வழிப்​பறி​யில் ஈடு​பட்​ட​வர் கொளத்​தூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜீவா என்ற ஈரல் ஜீவா (24) என்​பது தெரிய வந்​தது. தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், அவர் ராஜமங்​கலம் காவல் நிலைய சரித்​திர பதிவேடு குற்​ற​வாளி என்​பது தெரிந்​தது.

ஜீவா, சமீபத்​தில் சிறை​யில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலை​யில், மீண்​டும் வழிப்​பறி குற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இவர் மீது ஏற்​கெனவே 2 கொலை முயற்சி வழக்​கு​கள் உள்பட 16 குற்ற வழக்​கு​கள் இருப்​பதும் தெரிய​வந்​தது.

SCROLL FOR NEXT