கதிர்​வேல்

 
க்ரைம்

சென்னை: கத்தி முனையில் மாணவனிடம் செயின் பறித்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: உதவி கேட்​பது​போல் நடித்​து, மாணவனிடம் கத்தி முனை​யில் மிரட்டி தங்​கச் செயினைப் பறித்​தவர் கைது செய்யப்பட்​டார்.

சென்னை கல்​பாளை​யம், சூரியா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகு​தி​யில் உள்ள பள்ளி ஒன்​றில் 12-ம் வகுப்பு படித்து வரு​கிறார். கடந்த 6-ம் தேதி மாலை, வீட்​டின் அருகே உள்ள இடத்​தில் டியூஷன் முடித்​து​விட்டு சைக்​கிளில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, வழி​யில் அந்த மாணவனை ஒரு​வர் இடைமறித்​து லிப்ட் கேட்​டுள்​ளார். ஆள் நடமாட்​டம் இல்​லாத இடத்​துக்கு மாணவனை அழைத்​துச் சென்ற அந்த நபர், கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, மாணவனின் தங்​கச் செயினைப் பறித்​துக் கொண்டு தப்​பிச் சென்றார்.

இதுகுறித்து புழல் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்கப்பட்டது. விசா​ரணை​யில், மாணவனிடம் நகை​யைப் பறித்​துச் சென்​றது சென்னை கொளத்​தூர், லட்​சுமிபுரத்​தைச் சேர்ந்த கதிர்​வேல் (39) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிட​மிருந்து மாணவனிடம் பறிக்​கப்​பட்ட தங்​கச் செயினும் மீட்​கப்​பட்​டது. வேலைக்​குச் செல்​லாமல் கதிர்வேல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய​வந்​தது.

SCROLL FOR NEXT