உள்படம்: எம்​எல்ஏ சதன்

 
க்ரைம்

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.1 கோடி காசோலை மோசடி வழக்​கில் மதிமுக எம்​எல்ஏ சதன் திரு​மலைக்​கு​மாருக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. மதிமுகவைச் சேர்ந்த டாக்​டர் சதன் திரு​மலைக்​கு​மார் தென்​காசி மாவட்​டம் வாசுதேவநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி எம்​எல்​ஏ-​வாக உள்​ளார்.

2016-ல் தனது தொழில் வளர்ச்​சிக்​காக சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் நிதி நிறு​வனத்​தில் ரூ.1 கோடி கடன் பெற்​றுள்​ளார். இதற்​காக தலா ரூ.50 லட்​சத்​துக்கு 2 காசோலைகளை அவர் வழங்​கி​யுள்​ளார்.

ஆனால் அந்​தக் காசோலைகள் பணமின்​றித் திரும்​பிய​தால், 2019-ல் சதன் திரு​மலைக்​கு​மாருக்கு எதி​ராக அந்​நிறு​வனம் எழும்​பூர் பெருநகர குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

சதன் திரு​மலைக்​கு​மார் எம்​எல்​ஏ-​வாக பதவி வகிப்​ப​தால், இந்த வழக்கு விசா​ரணை எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள் மீதான காசோலை மோசடி வழக்​கு​களை விசா​ரிக்​கும் ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர சிறப்பு குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டு, அங்கு நீதிபதி சுந்​தர​பாண்​டியன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி, எம்​எல்ஏ சதன் திரு​மலைக்​கு​மார் மீதான குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி, அவருக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். மேலும், சிறை தண்​டனையை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்ய ஏது​வாக 2 மாதம் அவகாசம் வழங்​கி​யும், அது​வரை சிறை தண்​டனையை நிறுத்தி வைத்​தும் உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT