க்ரைம்

பெங்களூருவில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி

மனைவி, தந்தை, நண்பர்கள் உடந்தையாக இருந்தது அம்பலம்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு​வில் பெண் பொறி​யாளர் ஒரு​வரிடம் தொழில​திபரை போல நடித்து திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​கூறி ரூ.1.53 கோடி ஏமாற்​றிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த மோசடிக்கு அந்த நபரின் தந்​தை, மனை​வி, நண்​பர்​களும் உடந்​தை​யாக இருந்​தது அம்​பல​மாகி​யுள்​ளது.

பெங்​களூரு​வில் உள்ள அஞ்​சே​பாளை​யாவைச் சேர்ந்த 29 வயது பெண் பொறி​யாளர். கெங்​கேரி காவல் நிலை​யத்​தில் கடந்த 16-ம் தேதி புகார் ஒன்றை அளித்​தார். அதில் கூறியிருந்ததாவது: கடந்த 2024 மார்ச் மாதம் திருமண வலைத்தளம் வாயிலாக பெங்களூருவைச் சேர்ந்த விஜய் ராஜ் கவுடா (34) எனக்கு அறி​முக​மா​னார். என்னை திரு​மணம் செய்​து​கொள்ள விருப்​பம் தெரி​வித்த அவர், தன்னை வி.ஆர்​.ஜி. நிறு​வனத்​தின் உரிமை​யாளர் என கூறினார்.

மேலும் அமலாக்​கத்​துறை அவரது நிறு​வனத்​தின் ரூ.715 கோடி மதிப்​பிலான சொத்​து​களை முடக்கி வைத்​திருப்​ப​தாகக் கூறி, அதற்​கான ஆவணங்​களை போலி​யாக தயாரித்து என்​னிடம் காட்​டி​னார்.என்னை திரு​மணம் செய்​து ​கொள்வ​தாக‌க்கூறிய​தால்,அவருடன் நெருங்கி பழகியதுடன் அவர் கேட்கும் போதெல்லாம் ரூ.1.75 கோடி வரை கொடுத்தேன்.

அதில் ரூ.22 லட்​சத்தை திரும்பக் கொடுத்​து​ விட்​டார். மீத​முள்ள 1.53 கோடி தரவில்​லை. இவ்​வாறு பணம் கொடுக்​கல் வாங்​கலில் எனக்​கும் அவருக்​கும் மோதல் ஏற்​பட்​டது. ஒரு கட்​டத்​தில் அவருக்கு திரு​மண​மானது தெரிய​வந்​தது. மனைவி சவுமியாவை தனது சகோ​தரி என எனக்கு அறி​முகம் செய்து வைத்​திருந்​தார். அவரது இந்த மோசடிக்கு மனைவி சவுமி​யா, தந்தை போரே கவு​டா, நண்​பர்​கள் அஷ்​வின் கவு​டா, ரமேஷ் கவுடா உடந்​தை​யாக இருந்​தனர்.

இந்த பணத்​தை​யும் மோசடி யை​யும் கண்​டித்​த​தால் விஜய் ராஜ் கவுடா எனக்கு கொலை மிரட்​டல் விடுத்​தார். மேலும் எனது பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வரு​கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்வாறு கோரியிருந்​தார். இதுகுறித்து கெங்​கேரி போலீ​ஸார் வழக்கு பதிந்து, தலைமறைவான விஜய்​ ராஜ் கவுடா உள்​ளிட்​ட 5 பேரை​யும்​ போலீஸார்​ தேடி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT