க்ரைம்

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கத்தியால் குத்தியவர் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர்: பள்​ளி​வாசலுக்கு மந்​திரிக்​கச் சென்ற இளம்​பெண்ணை பாலியல் துன்​புறுத்​தல் செய்​து, கத்​தி​யால் குத்​திய பள்​ளி​வாசல் ஊழியர் கைது செய்​யப்​பட்​டார்.

விருதுநகர் மாவட்​டம் திருச்​சுழி அரு​கே​யுள்ள வீரசோழன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அப்​துல் அஜீஸ் (25). இவர் நரிக்​குடி ஜூம்மா பள்​ளி​வாசலில் மந்திரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இந்​நிலை​யில், 22 வயது பெண் ஒரு​வர் நேற்று முன்​தினம் மாலை தனக்கு உடல்​நிலை சரி​யில்லை என்​ப​தால், நரிக்​குடி ஜூம்மா பள்​ளி​வாசலில் மந்​திரிக்​கச் சென்​றுள்​ளார்.

அப்​போது, அந்த இளம்​பெண்ணை அப்​துல் அஜீஸ் பாலியல் துன்​புறுத்​தல் செய்​துள்​ளார். இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்​தப் பெண் கூச்​சலிட்​டுள்​ளார். உடனே அப்​துல் அஜீஸ் தான் வைத்​திருந்த சிறிய கத்​தி​யால் இளம்​பெண்​ணின் உடலில் பல இடங்​களில் குத்​தி​யுள்​ளார். இதையடுத்​து, அந்​தப் பெண் பள்​ளி​வாசலில் இருந்து அலறியபடி வெளியே ஓடி வந்​துள்​ளார்.

அங்​கிருந்​தவர்​கள் அவரை மீட்​டு, திருச்​சுழி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மேலும், தப்​பியோட முயன்ற அப்​துல் அஜீஸை பிடித்​து, நரிக்​குடி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். இது தொடர்​பாக நரிக்​குடி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​துல் அஜீஸை‌ கைது செய்​துனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT