க்ரைம்

கார் கண்ணாடிகளை உடைத்த ரஷ்ய சுற்றுலாப் பயணி: மதுரை போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலை​யம் அருகே சாலை​யில் அரைகுறை ஆடை​யுடன் ஒரு​வர் கையில் கத்​தி, கற்​களு​டன் சுற்​றித்​திரிந்​தார். அவர் திடீரென சாலை​யோரத்​தில் நிறுத்தி இருந்த கார்​கள் மீது கற்​களை வீசி கண்​ணாடிகளை உடைத்​தார்.

வெளி​நாட்​டுக்​காரர் தோற்​றத்​தில் இருந்த அவரது செயலைத் தடுக்க அப்​பகு​தி​யினர் முற்​பட்​டனர். ஆனால், தான் வைத்​திருந்த கத்​தி​யைக் காட்டி மிரட்​டிய​தால் பொது​மக்​கள் அலறியடித்து ஓடினர்.

          

இதுகுறித்து தகவலறிந்த அண்ணா நகர் போலீ​ஸார் அங்கு சென்​று, அவரைப் பிடிக்க முயன்​றனர். அப்​போது, அரைகுறை ஆடை​யுடன் சுற்​றிய அந்​நபர் போலீ​ஸாரிட​மும் கத்​தி​யைக் காட்டி மிரட்​டி​னார். ஒரு வழி​யாக அவரை சுற்றி வளைத்​துப் பிடித்த போலீ​ஸார், அவரிடம் இருந்த கத்​தியை பறி்த்​தனர்.

பின்​னர் அவர் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவர் வைத்​திருந்த பையில் சோதனை​யிட்​ட​போது, அவரது பாஸ்​போர்ட் சிக்​கியது.

அவர் ரஷ்ய நாட்​டைச் சேர்ந்த ரிச்​சர்ட் (51) என்​பதும், சுற்​றுலா விசா​வில் மதுரை வந்​திருப்​பதும் தெரிய​வந்​தது. மது போதை​யில் அவ்​வாறு செய்​தாரா அல்​லது மனநிலை பாதிக்​கப்​பட்​டவரா என்​பது குறித்து அண்ணா நகர் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

SCROLL FOR NEXT