க்ரைம்

மதுரவாயலில் கப்பல் பொறியாளரை கொலை செய்து எரித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

பூந்​தமல்லி: சென்​னை, மதுர​வாயலில் கப்​பல் பொறி​யாளரை கொலை செய்து எரித்த 4 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்கப்பட்டது. சென்​னை, மதுர​வாயலை சேர்ந்​தவர் டில்​லி​பாபு என்ற வெங்​கடேசன்​(29).

கப்​பல் துறை​யில் பொறி​யாள​ராக பணிபுரிந்து வந்த டில்​லி​பாபு​விடம், மதுர​வாயல் கோகுல் என்ற கோகுல​கிருஷ்ணன்​(38), கடன் வாங்கி இருந்​த​தாக கூறப்​படு​கிறது. அந்த கடனை திருப்பி கொடுக்​கு​மாறு கோகுலுக்​கு, டில்​லி​ பாபு நெருக்​கடி கொடுத்து வந்​துள்​ளார்.

          

இதனை அறிந்த கோகுலின் நண்​பர்​களான மதுர​வாயல் கார்​மேகம் (38), பூபாலன் (32), ராஜ்கு​மார் (33), சுந்​தரேசன் என்​கிற சுந்​தர் (32), கடந்த 2012-ம் ஆண்டு பிப். 6-ம் தேதி, காரில் சென்று கொண்​டிருந்த டில்​லி​பாபுவை அவரது வீட்​டின் அருகே கடத்​தி​யுள்​ளனர்.

பிறகு, கார்​மேகம் உள்​ளிட்ட 4 பேர், காரிலேயே டில்​லி​பாபுவை கொலை செய்​து, திரு​வண்​ணா​மலை பகு​திக்கு உடலை எடுத்து சென்று எரித்​துள்​ளனர். இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்த மதுர​வாயல் போலீ​ஸார், கோகுல், கார்​மேகம் உள்​ளிட்ட 5 பேரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை பூந்​தமல்​லி​யில் உள்ள கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் 3-ல் நடை​பெற்று வந்​தது. இதில், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் பால​முரு​கன் ஆஜராகி வாதாடி​னார்.

முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில் கார்​மேகம், பூபாலன், ராஜ்கு​மார், சுந்​தரேசன் ஆகிய 4 பேர் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது.

இந்த வழக்​கின் தீர்ப்பை நேற்று பூந்​தமல்​லி, கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம்- 3 நீதிபதி விஜயகு​மார் அளித்​தார். அதில் 4 பேருக்கு ஆயுள் தண்​டனை, தலா ரூ.4,000அப​ராதம் விதிக்​கப்​பட்​டது. கோகுல் மீதான குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​ப​டாத​தால் அவர் விடு​தலை செய்​யப்பட்டார்.

SCROLL FOR NEXT