தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி ஒன்றியம் ஊத்துப்பள்ளம் சிவாடி காட்டுவளவு பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி.
இவர்கள் இருவருக்கும் விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆக.4-ம் தேதி சரவணனை முனுசாமி, அவரது உறவினர்கள் நவீன், காமராஜ், விஜயன், முத்து, மாதேஷ் ஆகியோர் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தொப்பூர் போலீஸார் பதிவு செய்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.