க்ரைம்

நிலம் விற்பனை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்

போலீஸார் முன்னிலையிலேயே கட்டிப்புரண்டு சண்டை

செய்திப்பிரிவு

சென்னை: அல்​லிகுளம் நீதி​மன்ற வளாகத்​தில் வழக்கு தொடர்​பாக ஏற்​பட்ட தக​ராறில், வழக்​கறிஞர்​கள் இரு தரப்​பினரிடையே கடும் மோதல் ஏற்​பட்​டது. இதில் பெண் ஒரு​வர் உட்​பட 3 பேர் காயமடைந்​தனர்.

நீதி​மன்ற பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் முன்​னிலை​யிலேயே இருதரப்​பினரும் சட்​டையைப் பிடித்து சர​மாரியாக தாக்​கிக் கொண்ட சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை அம்​பத்​தூர் பகுதி​யைச் சேர்ந்த 53 வயது பெண் ஒரு​வருக்கு அப்​பகுதி​யில் 800 சதுர அடி நிலம் உள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த நிலத்தை அவரது தங்கை போலி ஆவணங்​கள் தயாரித்து வேறு ஒரு​வருக்கு விற்​பனை செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இத​னால் பாதிக்​கப்​பட்ட பெண், வழக்​கறிஞர் ஒரு​வரின் மூலம் அல்​லிகுளம் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். ஆனால், தனது தரப்பு வழக்​கறிஞர் எதிர்​தரப்​பினருக்கு ஆதர​வாகச் செயல்​பட்​ட​தாகவும், இத​னால் வழக்​கில் தனக்கு பாதக​மான முடிவு ஏற்​பட்​ட​தாகவும் அந்​தப் பெண் குற்​றம் சாட்​டியுள்​ளார்.

இதையடுத்து அவர் மேல்​முறையீடு செய்​தார். தற்​போது புதிய வழக்​கறிஞர்​கள் இரு​வர் அவருக்​காக ஆஜராகி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மேல்​முறையீட்டு வழக்கு நேற்று மதி​யம் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பெண் தனது புதிய வழக்​கறிஞர்​களு​டன் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி​யிருந்​தார்.

அங்கு ஏற்​கெனவே அவருக்​காக ஆஜரான வழக்​கறிஞர் தனது மகன்​களு​டன் வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. அப்​போது இருதரப்​பினருக்​கும் இடையே திடீரென வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் அது கைகலப்​பாக மாறியது.

மோதலில் ஈடு​பட்ட இருதரப்​பினரும் ஒரு​வரை ஒரு​வர் சட்​டையைப் பிடித்து இழுத்து சர​மாரியாகத் தாக்​கிக் கொண்​டனர். தடுக்க வந்த போலீ​ஸாரை​யும் மீறி நீதி​மன்ற வளாகத்​திலேயே ஒரு​வரை ஒரு​வர் தாக்கி கீழே விழுந்து உருண்​டனர். இத​னால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

பின்​னர் போலீ​ஸார் இருதரப்​பினரை​யும் விலக்கி மோதலை முடிவுக்​குக் கொண்டு வந்​தனர். மோதலில் 2 வழக்​கறிஞர்​கள் மற்​றும் ஒரு பெண் ஆகியோர் காயம் அடைந்​தனர்.

இந்த விவகாரம் தொடர்​பாக பெரியமேடு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். இதற்கிடையே நீதி​மன்ற வளாகத்​தில் வழக்​கறிஞர்​கள் மோதிக் கொள்​ளும் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளியாகி வைரலானது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT