ராகுல், பிர​வீன் குமார்

 
க்ரைம்

முகமூடி அணிந்து ஜவுளி அதிபர் வீட்டில் கத்திமுனையில் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் நண்பருடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஜவுளி அதிபர் வீடு புகுந்து கத்​தி​முனை​யில் முகமூடி கொள்​ளை​யில் ஈடு​பட்ட வழக்​கறிஞர் நண்​பருடன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை புழல், கிழக்கு காவாங்​கரை, மகாவீர் கார்​டன் மெயின் தெரு​வில் வசித்து வருபவர் விஜயகு​மார்.

மணிப்​பூரில் மொத்த துணி வியா​பாரம் செய்து வரு​கிறார். கடந்த 30-ம் தேதி அதி​காலை இவரது வீட்​டுக்​குள் நுழைந்த முகமூடி கொள்​ளை​யர்​கள் கத்​தி​முனை​யில் விஜயகு​மார், அவரது மனை​வி, தாய் மற்​றும் 2 மகள்​களை மிரட்​டி கட்​டிப்​போட்டு பீரோ​விலிருந்த ரூ.25 லட்​சம், 13 பவுன் தங்க நகை, பூஜை அறை​யில் வைத்​திருந்த சுமார் 250 கிராம் வெள்ளி உள்​ளிட்ட பொருட்​களை கொள்​ளை​யடித்து காரில் தப்​பினர்.

          

இதுகுறித்​து, புழல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, முதல் கட்​ட​மாக சிசிடிவி கேமரா காட்​சிகளில் பதிவான கொள்​ளை​யர்​கள் தப்​பிய கார் எண்ணை அடிப்​படை​யாக வைத்​து் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இதில், கொள்​ளை​யில் ஈடு​பட்​டது சென்னை எண்​ணூர் பெரிய​காசி கோவில் குப்​பத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ராகுல் (28), புழல் என்​எஸ்கே தெரு​வைச் சேர்ந்த பிர​வீன் குமார் (28) என்​பது தெரிந்​தது.

இவர்​களை கைது செய்து சிறை​யில் அடைந்த போலீ​ஸார் தலைமறை​வாக உள்ள கூட்​டாளி​களான 4 பேரை தனிப்​படை அமைத்​து தொடர்ந்​து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT