க்ரைம்

சென்னை: தனியார் டிவி செய்தி தயாரிப்பாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓட்​டேரி பிரிசிலி நகர் மலை​யப்​பன் தெரு​வைச் சேர்ந்​தவர் பசுமதி (53). இவர் தனி​யார் தொலைக்​காட்சி நிறு​வனத்​தில் செய்​திப்​பிரி​வில் தயாரிப்​பாள​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

திரு​மணம் ஆகாத பசும​தி, தனது அக்​காள் பவானி​யுடன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் பசுமதி வீட்​டில் தண்​ணீர் வராத​தால், வீட்டை பூட்டி விட்டு அரு​கில் வசிக்​கும் தனது சகோ​தரர் வீட்​டுக்கு தூங்​கச் சென்​றார்.

பின்​னர் நேற்று காலை பசுமதி வீட்​டுக்கு வந்தபோது, கதவு உடைக்​கப்​பட்டு இருந்தது. பீரோ​வும் உடைக்​கப்​பட்​டு, அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்​றும் ரூ.70 ஆயிரம் ரொக்​கப் ​பணம் திருட்டு போயிருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புளியந்​தோப்பு போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கைரேகை நிபுணர்​களும் வரவழைக்​கப்​பட்​டு, வீட்​டில் பதி​வாகி இருந்த தடயங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. அந்தப் பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேமரா பதிவுகளை​ போலீ​ஸார் ஆய்​வு செய்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT