புகாரி

க்ரைம்

தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான ஆய்வாளர் புகாரிக்கு 3 நாள் போலீஸ் காவல்

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் கைது செய்து விடு​வ​தாக மிரட்டி தொழில​திபரிடம் ரூ.40 லட்​சம் பறித்த வழக்​கில் கைதான காவல் ஆய்​வாளரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசா​ரணை நடத்த நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது.

பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த தொழில​திபர் அகில்​கு​மார். தங்க வியா​பாரம் செய்து வரு​கிறார். இவரை ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சேர்த்து கைது செய்து விடு​வ​தாக மிரட்​டி, ரூ.40 லட்​சம் வரை பணம் பறித்​த​தாக பரங்​கிமலை காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராக பணி​யாற்​றிய புகாரி, அவருக்கு உடந்​தை​யாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்​பைச் சேர்ந்த சீனி​வாசன் ஆகிய இரு​வரை​யும் யானைக​வுனி போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

காவல் ஆய்வாளர் புகாரியை பணி​யிடை நீக்​கம் செய்து மாநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், மேலும் விசாரணை நடத்​து​வதற்​காக ஆய்​வாளர் புகாரி, சீனி​வாசன் ஆகிய இரு​வரை​யும் 3 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​ம​திக்க வேண்​டும் என்று யானைக​வுனி போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், இரு​வரை​யும் 3 நாட்​கள் போலீஸ் காவலில் வைத்து விசா​ரிக்க அனு​மதி வழங்கி உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, இரு​வரை​யும் போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களிடம், பணம் பறித்த விதம், பணம் கொடுக்​கப்​பட்ட இடங்​கள் மற்​றும் இந்த சம்​பவத்​தில் வேறு யாருக்​கேனும் தொடர்பு உள்​ள​தா? புகாரி வேறு யாரிட​மாவது இதே பாணி​யில் பணம் பறித்​துள்​ளா​ரா? என்பன உட்பட பல்​வேறு கோணங்​களில்​ போலீ​ஸார்​ தொடர்ந்​து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT