க்ரைம்

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

கரூர்: சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 5 வங்​கதேசத்​தினருக்கு தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து கரூர் 2-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

கரூர் மாவட்​டம் வெள்​ளியணை அருகே தம்மாநாயக்கன்பட்டியில் உள்ள தனி​யார் நூற்​பாலை​யில் வங்​கதேசத்​தைச் சேர்ந்த சிமுல்​ஹுசேன்​(26), அஜ்மிர் மமுன்​(24), ஜமிருல்​(32), சகுல் என்ற சைபுர்​(29), ஆசிக் ஹாசர்​(24) ஆகிய 5 பேர் சட்​ட​விரோத​மாக தங்கி பணி​யாற்றி வந்​த​தாக வெள்​ளியணை போலீ​ஸாருக்கு 2024-ம் ஆண்டு செப்​.25-ம் தேதி தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில், 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​து, சென்னை புழல் மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

கரூர் மாவட்ட 2-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த இந்த வழக்​கில் மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் நேற்று தீர்ப்​பளித்​தார்.

அதில், குற்​றம்​சாட்​டப்​பட்ட வங்​கதேசத்​தினர் 5 பேருக்​கும் உரிய ஆவணங்​களின்றி இந்​தி​யா​வுக்​குள் நுழைந்த குற்​றத்​துக்​காக தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்​ததுடன், தண்​டனை காலம் முடிந்​தவுடன் 5 பேரை​யும் அவர்​களது நாட்​டுக்கு திருப்பி அனுப்​ப​வும் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, 5 பேரும் மீண்​டும் சென்னை புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT