க்ரைம்

சேலம் அருகே அரசுப் பள்ளியில் புகுந்து ஆசிரியையை கொன்ற கணவர்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே ஓமலூரில் அரசுப் பள்​ளி​யில் 5 வயது குழந்​தையுடன் உணவு சாப்​பிட்​டுக் கொண்​டிருந்த ஆசிரியையை அவரது கணவரே வெட்​டிக் கொலை செய்த சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளது.

சேலம் மாவட்​டம் ஓமலூர் அருகே உள்ள பாலிகடை பகுதியைச் சேர்ந்​தவர் ஸ்ரீவித்​யா. இவர் காமலாபுரம் அரசு உயர் நிலைப் பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணியாற்றி வந்தார். நேற்று மதி​யம் உணவு இடைவேளை​யின் போது, பள்​ளி​யில் ஸ்ரீவித்யா தனது 5 வயது குழந்​தை​யுடன் அமர்ந்து உணவு சாப்​பிட்​டுக் கொண்​டிருந்​தார்.

          

அப்​போது, திடீரென பள்​ளிக்​குள் புகுந்த அவரது கணவர் விஜய​முரு​கன், மறைத்து வைத்திருந்த அரி​வாளால் ஸ்ரீவித்யாவின் தலை மற்​றும் கழுத்​துப்பகு​தி​களில் வெட்​டி​யுள்​ளார். ரத்த வெள்​ளத்​தில் சரிந்த ஸ்ரீவித்யா சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார்.

தகவல் அறிந்து வந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்​சீவ்​கு​மார் தலைமையிலான போலீ​ஸார், ஆசிரியை ஸ்ரீ வித்​யா​வின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தலைமறை​வான விஜய​முரு​கனை பிடிக்க தனிப்​படை அமைக்​கப்​பட்டு போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரும் ஓமலூர் போலீ​ஸார் கூறும்​போது, விஜய​முரு​கன் ஏற்​கெனவே விவாகரத்தான நிலை​யில் ஸ்ரீவித்​யாவை 2-வது திரு​மணம் செய்​துள்​ளார்.

மனைவி மீது சந்​தேகம் கொண்டு அடிக்​கடி அவரிடம் தகராறில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். நடத்​தை​யில் சந்​தேகப்​பட்டு கொலை மிரட்​டல் விடுத்​தது குறித்து ஓமலூர் காவல் நிலை​யத்​தில் ஸ்ரீவித்யாபுகார் அளித்​துள்​ளார். இந்நிலையில் ஸ்ரீவித்​​யாவை அவர் கொலை செய்​தது தெரிய​வந்​துள்​ளது என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT