மனிதக்கழிவு கலந்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.

 
க்ரைம்

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு: மயிலாடுதுறை அருகே மக்கள் புகார்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே உள்ள வில்​லியநல்​லூர் ஊராட்சி பன்​னீர்​வேலி கிராமத்​தில் காளியம்​மன் கோயில் எதி​ரில் மேல்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி உள்​ளது. 1995-ல் அமைக்​கப்​பட்ட 30 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட இந்த நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் இருந்து, அப்​பகுதி​யில் உள்ள சுமார் 200 குடும்​பங்​களுக்கு குடிநீர் விநியோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், அப்​பகுதி​யைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் செல்​போனில் டவர் கிடைக்​காததால் மேல்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி ஏணி​யின் மீது ஏறியுள்​ளார். அப்​போது துர்​நாற்​றம் வீசவே, தொட்​டி​யின் மேல் பகுதிக்​குச் சென்று பார்த்​துள்​ளார். குடிநீர் தொட்​டி​யில் மனிதக்​கழிவு கலக்​கப்​பட்​டிருப்​பது கண்டு அதிர்ச்சி அடைந்​துள்​ளார்.

இது​குறித்து ஊரக வளர்ச்​சித் துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரி​விக்​கப்​பட்​டது. இதையடுத்து நேற்று அந்த தொட்​டி​யில் இருந்து குடிநீர் விநியோகம் செய்​வது நிறுத்தப்பட்​டது. மனிதக்​கழிவு கலந்த குடிநீரை ஆய்​வுக்​காக எடுத்து அனுப்ப உள்​ளோம். பொது​மக்​களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன’ என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது​குறித்து ஊர் மக்​கள் கூறும்​போது, “பல ஆண்​டுகளாக குடிநீர் தொட்​டியை சுத்​தம் செய்​ய​வில்லை. தொட்​டி​யின் மேல்​புற கான்​கிரீட் உடைந்து விழும் நிலை​யில் உள்​ளது. இந்​தத் தொட்​டியை அகற்​றி​விட்டு, புதிய தொட்டி கட்​டுவதுடன், தொட்​டி​யில் மனிதக்​கழிவு கலந்​தவர்​கள் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும்”என்றனர்.

இந்த சம்பவம் தொடர்​பாக மாவட்ட காவல் கண்​காணிப்பாளர் சினேகா பிரியா அளித்​துள்ள விளக்​கத்​தில், ‘நீர்த்​தேக்க தொட்​டி​யில் மனிதக் கழிவு கலக்​கப்​பட​வில்லை. மேல்​புறத்​தில் உள்ள கான்​கிரீட் தளத்​தில்​தான் மனிதக் கழிவு காணப்​பட்​டது. தீபாவளி அன்று இரவு அப்​பகுதி​யில் வசிக்​கும் ஒரு சிறு​வன் அவசரத்​தில் குடிநீர் தொட்​டி​யின்​மேல் இயற்கை உபாதையை கழித்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

இதில் அச்​சிறுவனுக்கு எந்​த​வித உள்​நோக்​கமும் இல்லை என்​ப​தும் தெரிய​வந்​துள்​ளது என கூறியுள்​ளார்.மனிதக்கழிவு கலந்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT