க்ரைம்

ஆவடி | செவிலியர் பணி வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: சென்​னை, பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பணி வாங்கி தரு​வ​தாகக் கூறி ரூ.10.81 லட்​சம் மோசடி செய்​தது தொடர்​பாக ரயில்வே மருத்​து​வ​மனை ஊழியரை நேற்று ஆவடி மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

திரு​வள்​ளூர் அருகே உள்ள புட்​லூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஜெயப்​பிரியா (24). இவர் திரு​வள்​ளூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் செவிலிய​ராக பணிபுரிந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் ஜெயப்​பிரி​யா​வுக்​கு, கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு செங்​கல்​பட்டு மாவட்​டம், மேற்கு தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த சென்​னை, பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை ஊழிய​ரான ரோஹித் (29) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது.

இச்​சூழலில், ரோஹித், கடந்த 2024-ம் ஆண்டு பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பணி வாங்​கித் தரு​வ​தாக கூறி, ஜெயப்​பிரி​யா​விடம் ரூ.10.81 லட்​சத்தை பெற்​றுள்​ளார்.

தொடர்ந்​து, ரோஹித், செவிலியர் பணிக்​கான பணி ஆணையை ஜெயப்​பிரி​யா​விடம் அளித்​துள்​ளார். பிறகு, அந்த ஆணை போலி​யானது என அறிந்த ஜெயப்​பிரி​யா, தான் அளித்த பணத்தை திரும்ப தரு​மாறு ரோஹித்​திடம் கேட்​டுள்​ளார். ஆனால், பணத்தை ரோஹித் திரும்ப தராமல் ஏமாற்றி வந்​துள்​ளார்.

போலீ​ஸார் விசாரணை

இந்த மோசடி குறித்து ஜெயப்​பிரியா அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்​திய குற்​றப்​பிரி​வின் வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணை நடத்​தினர். அதன் அடிப்​படை​யில் தலைமறை​வாக இருந்த ரோஹித்தை நேற்று வேலை​வாய்ப்பு மோசடி பிரிவு போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT