க்ரைம்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத இளைஞர் சடலம்: கொலையாளி யார் என போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்பூர் ரயில் நிலை​யத்​தில் கேட்​பாரற்ற சூட்​கேஸில் தலை​யில்​லாத இளைஞர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. பெரம்​பூர் ரயில் நிலை​யம் நேற்று காலை வழக்​கம்​போல் பரபரப்​பாக காணப்​பட்​டது.

அப்​போது அங்​குள்ள 4-வது நடைமேடை​யில் நீல நிற சூட்​கேஸ் ஒன்று கேட்​பாரற்று கிடந்​தது. நீண்ட நேர​மாக சூட்​கேஸ் அங்​கேயே இருந்​த​தால், ரயில்வே போலீ​ஸாருக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது.

இதையடுத்து ரயில்வே போலீ​ஸார் மற்​றும் ரயில்வே பாது​காப்​புப் படை வீரர்​கள் விரைந்து சென்று அந்த சூட்​கேஸை எடுத்​தனர். அது அதிக எடை​யுடன் காணப்​பட்​ட​தால் சந்​தேகம் ஏற்​பட்​டது.

உடனடி​யாக வெடிபொருட்​களைக் கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் வரவழைக்​கப்​பட்டு சோதனைக்கு உள்​ளாக்​கப்​பட்​டது. அப்​போது பெட்​டி​யில் வெடிபொருட்​கள் எது​வும் இல்லை எனத் தெரிய​வந்​தது. இதையடுத்து சூட்​கேஸின் பூட்டை உடைத்து பார்த்​த​போது அதற்​குள் தலை​யில்​லாத இளைஞர் ஒரு​வரது சடலம் இருந்​தது.

அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீ​ஸார் அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்​கப்​பட்​டது. அந்த நாய் அங்​கும் இங்​கும் சிறிது தூரம் ஓடியது.

ஆனால் யாரை​யும் பிடிக்​க​வில்​லை. இந்த விவ​காரம் தொடர்​பாக ரயில்வே போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர். முதல் கட்​ட​மாக சிசிடிவி கேமரா காட்​சிகள் ஆய்வு செய்​யப்​பட்​டன. அதில் சூட்​கேஸ் இருந்த இடம் பதி​வாக​வில்​லை.

இதனால் சூட்​கேஸை கொண்டு வந்​தது யார் என போலீ​ஸா​ரால் உடனடி​யாக கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. மேலும் கொலை​யானவர் யார், இறந்​தவர் சென்னை இளைஞரா அல்​லது வேறு மாநிலத்​தில் கொலை செய்து உடலை இங்கு வீசிச் சென்​றார்​களா என போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT