கோப்புப் படம்
ராமேசுவரம்: இலங்கை யாழ்ப்பாணம் மாத கல் கடற்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த படகை சோதனை செய்த இலங்கை கடற்படை அதில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 85 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
அவர்களையும், பறிமுதல் தங்கத்தையும் அந்நாட்டு சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தங்கக் கடத்தலின் பின்னணியில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்தோர் உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும், சுங்கத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்துவதற்காக இத்தங்கத்தை கொண்டுவந்ததாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.10 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.