கோவை: விமானத்தில் ரூ.1.15 கோடி மதி்ப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பெண் பயணியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷார்ஜாவில் இருந்து எப்எல்டி ‘ஜி-9410’ என்ற விமானம் நேற்று கோவை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் பயணி ஒருவரை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அவர் தனது உள்ளாடைகளுக்குள் பசை (பேஸ்ட்) வடிவில் மறைத்து வைத்திருந்த 808.27 கிராம் எடையுடைய 24 காரட் தங்கத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.15 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.