மாதிரிப் படம்

 
க்ரைம்

வேதாரண்யம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வே​தா​ரண்​யம் அருகே இலங்​கை​யில் இருந்து கடத்​திவரப்​பட்ட ரூ.8 கோடி மதிப்​பிலான 6 கிலோ தங்​கக் கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. கடத்​தலில் ஈடு​பட்ட ஒரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இலங்​கை​யில் இருந்து படகு மூலம் நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் கடலோரப் பகு​திக்கு தங்​கம் கடத்​தப்​பட்டு வரு​வ​தாக, காவல் துறை​யின் நுண்​ணறி​வுப் பிரிவு அதி​காரி​களுக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து, வேதா​ரண்​யம் கடலோரப் பகு​தி​யில் க்யூ பிரிவு ஆய்​வாளர் ராஜேஷ் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, ஆறு​காட்​டுத்​துறை​யில் இருந்து இருசக்கர வாக​னத்​தில், சந்​தேகத்​துக்கு இடமான வகை​யில் சென்​றவரை போலீ​ஸார் பின்​தொடர்ந்​தனர். விழுந்​த​மாவடி அருகே வேதா​ரண்​யம்- நாகை பிர​தான சாலை​யில் சென்​று​கொண்​டிருந்த அவரைப் பிடித்து போலீ​ஸார் சோதனை​யிட்​ட​போது, ரூ.8 கோடி மதிப்​பிலான 6 கிலோ தங்கக் கட்​டிகள் வைத்​திருந்​ததைக் கண்​டறிந்​தனர்.

தொடர்ந்​து, அவரிட​மிருந்து தங்​கக் கட்​டிகளை பறி​முதல் செய்த போலீ​ஸார், அவரிட​மிருந்த தங்​கக் கட்​டிகள் மற்​றும் அவர் ஓட்​டிவந்த இருசக்கர வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​து, தோப்​புத்​துறை​யில் உள்ள சுங்​கத் துறை கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் ஒப்​படைத்​தனர். அங்கு நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடத்​தலில் ஈடு​பட்​ட​வர் நாகை நெல்​லுக்​கடை மாரி​யம்​மன் கோயில் அருகே வசித்து வரும் சிவக்​கு​மார்​(42) என்​பதும், தங்​கக் கட்​டிகள் இலங்​கை​யில் இருந்து கடத்​திவரப்​பட்​டவை என்​பதும் தெரிய​வந்​தது. இது தொடர்​பாக சுங்​கத் துறை​யினர் வழக்​குப் பதிவுசெய்​து, தங்​கக் கடத்​தலில் ஈடு​பட்ட சிவக்​கு​மாரை கைது செய்​தனர். இவர், 2017-ம் ஆண்டுராம​நாத​புரத்​தில் நடை​பெற்ற தங்கக் கடத்​தல் வழக்​கிலும்தொடர்​புடைய​வர் என்​பது தெரிய​வந்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT