க்ரைம்

போதைக்காக விற்பனை செய்ய பிஹாரிலிருந்து வலி நிவாரண மாத்திரைகள் கடத்திய 8 பேர் கும்பல் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​போதை மாத்​திரை​யாக விற்க பிஹாரிலிருந்து வலி நிவாரண மாத்​திரைகளை கடத்தி வந்த 8 பேர் கும்​பல் சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டது. போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக சென்னை போலீ​ஸார் கடும் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

அதன் ஒரு பகு​தி​யாக கொடுங்​கையூர் போலீ​ஸார் கடந்த 19-ம் தேதி இரவு, கொடுங்​கையூர் ஆர்​.ஆர். நகரில் கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு சந்​தேகத்​துக்​கிட​மாக நின்று கொண்​டிருந்த சிலரிடம் விசா​ரணை செய்​து, சோதனை செய்​த​போது அவர்​கள் 1,800 வலி நிவாரண மாத்​திரைகளை போதைப் பொருளாக விற்​பனை செய்ய மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார் வலி நிவாரண மாத்​திரைகளை வைத்​திருந்த கொருக்​குப்​பேட்டை பிர​வீன்​கு​மார் (23), கொடுங்​கையூர் அரவிந்த் (27), பைஜான் அஹமது (23), அஜித் (27), சுபாஷ் (25), ஷதாப் உசேன் (27), ரஞ்​சித் (28), சஞ்​சய் (23) ஆகிய 8 பேரை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் இவர்​கள் பிஹார் மாநிலத்​திலிருந்து வலி நிவாரண மாத்​திரைகளை மொத்​த​மாக வாங்கி வந்து சென்​னை​யில் சட்ட விரோத​மாக போதை மாத்​திரை​யாக விற்க திட்​ட​மிட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

மேலும் கைது செய்​யப்​பட்ட பிர​வீன்​கு​மார் மீது ஏற்​கெனவே 11 குற்ற வழக்​கு​களும், ரஞ்​சித் மீது 6 குற்ற வழக்​கு​களும், சுபாஷ் மீது 9 குற்ற வழக்​கு​களும் இருப்​பது தெரிந்​தது. இவர்​கள் 3 பேரும் போலீ​ஸாரின் சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி​கள் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT