சென்னை: சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477-க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கு நவ. 23 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில் இந்த காலக்கெடு டிச.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்
களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிறு உட்பட) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையை பெறலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.