க்ரைம்

வேளச்சேரியில் டெலிவரி ஊழியரை வெட்டிய கும்பல்: பொதுமக்கள் கற்களை வீசி எறிந்ததால் கொலை தடுக்கப்பட்டது

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரியில் இளைஞர் ஒரு​வரை 4 பேர் கும்பல் பட்​டாக் கத்​தி​யால் வெட்டி சாய்த்த சம்​பவம் சமூக வலை​தளங்​களில் வைரலாகி அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி​யில் ரயி​லில் கத்​தி​யைக் காட்டி மிரட்​டு​வது போல ரீல்ஸ் எடுத்த சிறு​வர்​கள், அப்​போது ஏற்​பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, கொடூர​மாக அரி​வாளால் தாக்​கிய காட்​சிகள் இணை​யத்​தில் வைரலானது.

இந்த சம்​பவம் தொடர்​பாக 3 இளஞ்​சிறார்​கள் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். கஞ்சா போதை​யில் இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக கூறப்​பட்​டது. அந்த நினைவு மறைவதற்​குள் அடுத்த சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

வேளச்சேரியில் நேற்று முன்​தினம் இரவு 7.30 மணி​யள​வில் நேரு நகர், ஏ.எல்​.​முதலி தெரு​வில் நடந்து சென்ற இளைஞர் ஒரு​வரை இருசக்கர வாக​னங்​களில் வந்த 4 இளைஞர்​கள் அரி​வாளால் சரமாரி​யாக வெட்​டினர்.

வெட்​டுக் காயங்​களு​டன் ரத்​தம் வடிந்த நிலை​யில் சாலையில் அந்த இளைஞர் சரிந்த நிலை​யிலும் தொடர்ந்து வெட்​டிக் கொண்டே இருந்​துள்​ளனர்.

போதையில் பழிக்குப் பழி: இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த அப்​பகுதி மக்​கள் கற்​கள், கம்​பு​களை வீசி எறிந்​தனர். இதனால் தாக்​குதல் நடத்​திய இளைஞர்​கள் தப்பி ஓட்​டம் பிடித்​தனர். பொது​மக்​கள் தடுக்​க​வில்​லை​யென்​றால் இது கொலையில் முடிந்​திருக்​கும். இந்த காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் நேற்று வைரலானது.

இந்த சம்​பவம் தொடர்​பாக வேளச்சேரி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். இதில் தாக்​குதலுக்கு உள்​ளானவர் வேளச்சேரி, லட்​சுமி நகரை சேர்ந்த பார்த்​திபன் (23) என்​பதும், உணவு டெலிவரி நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​வதும் தெரிய​வந்​தது.

படு​காயமடைந்த பார்த்​திபன் மீட்​கப்​பட்டு ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளார். இது ஒரு​புறம் இருக்க சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில், தாக்​குதல் தொடர்​பாக வேளச்சேரியைச் சேர்ந்த நந்தா (24), சுந்​தர் (22), விஷ்ணு (21) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

தலைமறை​வாக உள்ள மேலும் இரு​வரை தேடி வரு​கின்​றனர். தீபாவளியன்று பார்த்​திபன் தாக்​கிய​தால் பழிக்​குப் பழி​யாக போதை​யில் வெட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

பொது வெளி​யில் மக்​கள் நடமாட்​டம் அதி​க​மாக உள்ள பகு​தி​யில் சர்வ சா​தா​ரண​மாக நிகழ்த்​தப்​பட்ட இந்த வன்​முறைச்​ சம்​பவம்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT