நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிடும் காவலர்.

 
க்ரைம்

நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் பயங்கரம்: கார், பைக்குகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது

மாணவிகளைப் பார்க்க வந்ததை கண்டித்ததால் ஆண் நண்பர்கள் ஆத்திரம்

செய்திப்பிரிவு

சென்னை:​ மாணவிகளைப் பார்க்க வரு​வதை கண்டித்ததால் ஆத்​திரம் அடைந்த ஆண் நண்​பர்​கள் நள்​ளிர​வில் வாக​னங்​கள் மீது பெட்​ரோல் குண்டுகளை வீசி​ய​தால் நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் பரபரப்பு ஏற்​பட்​டது.

சென்னை நுங்​கம்​பாக்​கம் புஷ்பா நகர் ராமலிங்க வள்​ளலார் கோவில் அருகே நேற்று அதி​காலை கார் மற்​றும் இருசக்கர வாக​னங்​கள் தீப்​பிடித்து எரிவ​தாக நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். தடய​வியல் நிபுணர்​களும் சம்பவ இடத்​தில் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, பீர் பாட்​டில்​களில் பெட்​ரோல் நிரப்​பி, தீ வைத்து வாக​னங்​கள் மீது வீசி​யது தெரிய​வந்​தது.

இதில் தீக்​கிரை​யான கார், புஷ்பா நகரைச் சேர்ந்த வெங்​கடேசன் என்​பவருக்கு சொந்​த​மானது என்​றும், இவர் திமுக வழக்​கறிஞர் பிரி​வின் பகுதி அமைப்​பாள​ராக உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது.

அதே​போல், அப்​பகு​தி​யைச் சேர்ந்த காமேஷ் கண்​ணனுக்கு சொந்​த​மான இருசக்கர வாக​ன​மும் சேதமடைந்​தது. முதற்​கட்​ட​மாக போலீ​ஸார் சம்பவ இடத்​தில் உள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களின் காட்​சிகளை ஆய்வு செய்​தனர்.

விசா​ரணை​யில், கடந்த சில நாட்​களாக புஷ்பா நகரில் வசிக்​கும் 2 மாணவி​களைப் பார்ப்​ப​தற்​காக அவர்​களது ஆண் நண்​பர்​கள் வந்து சென்​ற​தாக​வும், இதனை கவனித்த அப்​பகுதி மக்​கள் சிலர் அவர்​களை கண்​டித்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த இளைஞர்கள் சிலர் பெட்​ரோல் குண்​டு​களை வீசிய​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த சம்​பவத்​தில் ஒரு கார் மற்​றும் 4 இருசக்கர வாக​னங்​கள் சேதமடைந்​துள்​ளன.

5 பேர் கைது

இந்​நிலை​யில், கார் மீது பெட்​ரோல் குண்டு வீசப்​பட்ட விவ​காரத்​தில் மதுர​வாயலைச் சேர்ந்த சுரஜ் (20), அசோக் நகரைச் சேர்ந்த முகுந்​தன் (19), அதே பகு​தி​யைச் சேர்ந்த ஆதிஷ் (19), கோடம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறு​வர்​கள் இரு​வர் என 5 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

கண்​டனம்

வி த லீடர்ஸ் இயக்​கத்​தின் மக்​கள் தொடர்பு பொதுச் செய​லா​ளர் கே.சு​வாமி​நாதன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தலைநகரின் மையப்​பகு​தி​யான நுங்​கம்​பாக்​கத்​தில் பெட்​ரோல் குண்டு வீசப்​பட்​ட​தாக வரும் செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. குற்​ற​வாளி​கள்​ ​யா​ராக இருந்​​தா​லும்​ உடனடி​யாகக்​ கண்​டறியப்​பட்​டு கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​பட வேண்​டும்​.” என கூறி​யுள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT