வாஷிங் மெஷின் சர்வீஸ் சென்டர் உரிமையாளரை காரில் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீஜி, பிரேம்குமார், வேணுகோபால், யுவராஜ், ஆனந்த்.

 
க்ரைம்

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.8.50 லட்சம் மோசடி: கடை உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்​வ​தாகக் கூறி, ரூ.8.50 லட்​சம் பெற்று திரும்ப வழங்​காதவர் காரில் கடத்தி தாக்​கப்​பட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், செவ்​வாப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் தர்​ம​ராஜ் (31). சென்னை திரு​மங்​கலம், அவ்வை தெரு​வில் வாஷிங் மெஷின் சர்​வீஸ் கடை நடத்தி வரு​கிறார். கடந்த 5-ம் தேதி மாலை, கடை அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு கார் ஒன்று வந்​தது. அதிலிருந்து இறங்​கிய 7 பேர் கும்​பல் தர்​ம​ராஜை தாக்கி காரில் கடத்​தி​யது. கோவளம் பகு​திக்கு கடத்​திச் சென்று அங்கு வைத்​தும் அவரை தாக்​கியது.

மறு​நாள் (6-ம் தேதி) அவரை மீண்​டும் அந்த கும்​பல் திரு​மங்​கலம் அழைத்து வந்து கொண்​டிருந்த போது, சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள அக்​கரை சிக்​னல் அருகே தர்​ம​ராஜ் காப்​பாற்​றும்​படி திடீரென கூச்​சலிட்​டார்.

அவரது அலறல் சத்​தம் கேட்டு சோதனைச் சாவடி​யில் இருந்த போலீ​ஸார், மற்​றொரு காரில் பின் தொடர்ந்து விரட்டி சிறிது தூரத்​தில் மடக்​கினர். இதையடுத்து 2 பேர் பயந்து ஓட்​டம் பிடித்த நிலை​யில் 5 பேரும் பிடிபட்​டனர்.

காரில் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த தர்​ம​ராஜ் மீட்​கப்​பட்​டார். அவர்​கள் அனை​வரும் நீலாங்​கரை போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். தர்​ம​ராஜ் கடத்​தப்​பட்ட இடம் திரு​மங்​கலம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகுதி என்​ப​தால், அந்த நிலைய போலீ​ஸாரிடம் அனை​வரும் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

விசா​ரணை​யில் கடத்​தலில் ஈடு​பட்​டது பழைய பல்​லா​வரத்​தைச் சேர்ந்த ஸ்ரீஜி (30), ஜமீன் பல்​லா​வரத்​தைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (36), வேணுகோ​பால் (30), வானகரத்​தைச் சேர்ந்த யுவ​ராஜ் (36), மணப்​பாக்​கத்​தைச் சேர்ந்த ஆனந்த் (25) என்​பது தெரிந்​தது.

இந்த 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து கடத்​தலுக்கு பயன்​படுத்​திய கார் மற்​றும் 5 செல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

கடத்​தலில் ஈடு​பட்ட 7 பேரிடம் கடத்​தப்​பட்ட தர்​ம​ராஜ் ஆருத்ரா நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, பணம் பெற்​றுக் கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இப்​படி ரூ.8.50 லட்​சம் வரை பெற்​றுக்​கொண்​டு, அப்​பணத்தை திரும்ப வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்​தவர்​கள் பணத்தை திரும்​பக் கேட்​டு, தர்​ம​ராஜை கடத்தி தாக்​கி​யுள்​ளனர். ஆனால் இந்த குற்​றச்​சாட்டை தர்​ம​ராஜ் தொடர்ந்து மறுத்து வரு​கிறார். எனவே இந்த விவ​காரம் தொடர்​பாக தொடர்ந்து வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது என போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT