அமலாக்கத் துறையின் ரகசிய கடிதம் வெளியான விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

அமலாக்கத் துறையின் ரகசிய கடிதம் வெளியான விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை எழு​திய ரகசிய கடிதம் வெளி​யான விவ​காரம் சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

திருச்​சியை சேர்ந்த வழக்​கறிஞர் பரஞ்​சோ​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அண்​மை​யில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு விசா​ரணைக்​காக கடந்த மாதம் 26-ம் தேதி ஆஜரான​போது, மருது சேனை​யின் தலை​வர் ஆதி​நா​ராயணன் தாக்​கல் செய்த பொதுநல மனு விசா​ரணைக்கு வந்​தது.

அவர் தனது மனு​வில் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை அனுப்​பிய ரகசிய கடிதத்​தின் நகலை இணைத்​து, அந்த கடிதத்​தின் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்​யக் கோரி​யிருந்​தார். ஆதி நாராயணன் என்​பவர் மீது தமிழகத்​தில் பல்​வேறு காவல் நிலை​யங்​களில் குற்ற வழக்​கு​கள் உள்​ளது.

டிஜிபிக்கு அனுப்​பிய ரகசிய கடிதம் அவருக்கு எப்​படி கிடைத்​தது என்​பது புதி​ராக உள்​ளது. அந்த வழக்கு விசா​ரணை​யின்​போது நீதிப​தி​களே மனு​தா​ரருக்கு அமலாக்கத் துறை​யின் கடிதம் எப்​படி கிடைத்​தது என கேள்வி எழுப்​பினர்.

நடவடிக்கை எடுக்​க​வில்​லை: எனவே, டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை அனுப்​பிய ரகசிய கடிதம் மனு​தா​ரருக்கு எவ்​வாறு கிடைத்​தது என்​பது விசா​ரணைக்கு உட்​படுத்த வேண்​டும்.

இந்த ரகசிய கடிதத்தை மனு​தா​ரருக்கு வழங்​கிய அரசு அதி​காரி​கள் மற்​றும் அரசி​யல் கட்​சி​யினர், உதவிய வழக்​கறிஞர்​கள் குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும். இது தொடர்​பாக டிஜிபிக்கு மனு அனுப்​பினேன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

எனவே, பல்​வேறு குற்ற வழக்​கு​களில் தொடர்​புடைய நபருக்கு அமலாக்க துறை​யின் ரகசிய கடிதம் எப்​படி கிடைத்​தது என்​பது குறித்து விசா​ரிக்​க​வும், அதன் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எஸ்​.மதி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், அமலாக்கத் துறை​யின் ரகசிய கடிதம் வெளி​யான விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசு அதி​காரி​கள், வழக்​கறிஞர்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு முதல்​கட்ட விசா​ரணை தொடங்​கப்​பட்​டுள்​ளது என தெரிவிக்​கப்​பட்​டது.

இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், அமலாக்​கத்​துறை எழு​திய கடிதம் வெளி​யான விவ​காரம் குறித்து சிபிசிஐடி வி​சா​ரிக்க டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட​ராமன்​ உத்​த​ரவிட்​டுள்​ளார்​.

அமலாக்கத் துறையின் ரகசிய கடிதம் வெளியான விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பெண் உடல் மீட்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in