க்ரைம்

விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்து அதிக லாபம் தருவதாக ரூ.1,417 கோடி மோசடி

இருவரை கைது செய்தது அமலாக்கத் துறை

செய்திப்பிரிவு

சென்னை: ​விவ​சாயப் பொருட்​களை ஏற்​றுமதி செய்து அதிக லாபம் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.1,417 கோடி நிதி மோசடி​யில் ஈடு​பட்ட ‘யூனிக் எக்​ஸ்​போர்ட்​ஸ்’ நிறு​வனத்​தைச் சேர்ந்த இரு​வரை அமலாக்​கத்​துறை கைது செய்​துள்​ளது.

ஈரோட்​டைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கிய ‘யூனிக் எக்​ஸ்​போர்ட்​ஸ்’ நிறு​வனத்​தின் உரிமை​யாளர் எஸ். நவீன் குமார் மற்​றும் அவரது கூட்​டாளி​கள், விவ​சாய விளைபொருட்​களை ஏற்​றுமதி செய்​வதன் மூலம் பெரும் லாபம் ஈட்​டித் தரு​வ​தாகக் கூறி முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாயை வசூலித்து மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக ஈரோடு மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இவ்​வழக்​கில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​ததை அடுத்​து, அமலாக்​கத்​துறை தனி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யில் இறங்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த ஜூன் 16, 17 ஆகிய தேதி​களில் அந்​நிறு​வனத்​துடன் தொடர்​புடைய 9 இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் பல முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

விசா​ரணை​யில், ‘யூனிக் எக்​ஸ்​போர்ட்​ஸ்’, ‘ஈஸ்ட் வேலி அக்ரோ ப்ரிம்​ஸ்’ போன்ற நிறு​வனங்​களின் பெயரில் பல்​வேறு முதலீட்​டுத் திட்​டங்​களை உரு​வாக்​கி, சுமார் 35,759 முதலீட்​டாளர்​களிடம் இருந்து ரூ.1,417.86 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது அம்​பல​மானது.

இந்த நிறுவனம் போலி​யான ஏற்​றுமதி லாபத்​தைக் காட்​டியே தொடர்ந்து முதலீட்​டாளர்​களிடம் பணம் பறித்​ததும் தெரிய​வந்​தது.

நிறு​வனத்​தில் வெறும் 4 பேர் மட்​டுமே பணிபுரிந்த நிலை​யில், அவர்​களுக்​குச் சம்​பள​மாக ரூ.390.90 கோடி வழங்​கப்​பட்​ட​தாகக் கணக்​குக் காட்​டி​யுள்​ளனர்.

விவ​சாயப் பொருட்​கள் எது​வும் வாங்​காமல், வெங்​கா​யம் மற்​றும் வணி​கப் பொருட்​கள் வாங்​கிய​தாக ரூ.79.56 கோடி பொய்க் கணக்கு எழு​தி​யும் நிதியை மறைத்​துள்​ளனர்.

குறிப்​பாக, நிறு​வனத்​தின் உரிமை​யாளர் நவீன் குமார், இந்த மோசடித் திட்​டங்​களின் பின்​னணி​யில் இருந்து வங்​கிப் பரிவர்த்​தனை​கள் மற்​றும் முதலீட்​டாளர்​களின் நிதியை முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​தி​உள்​ளார்.

அவரது கூட்​டாளி எஸ். முத்​துசெல்​வம், முதலீட்​டாளர்​களைத் திரட்​டு​வ​தி​லும் நிதி​யைத் திருப்​புவ​தி​லும் முக்​கியப் பங்கு வகித்​துள்​ளார் என்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, நவீன் குமார் மற்​றும் முத்​துசெல்​வம் ஆகிய இரு​வரை​யும் அமலாக்​கத்​துறை கைது செய்​தது. நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட இரு​வருக்​கும் 15 நாட்​கள் நீதி​மன்​றக் காவல் விதிக்​கப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT