சென்னை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (30). சென்னை புழல் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு, புழல்- செங்குன்றம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 திருநங்கைகள், பிரசாந்த்தை வழிமறித்து தடுத்து நிறுத்தி, ஆசிர்வாதம் செய்தனர்.
இதையடுத்து, உடடினயாக பிரசாந்த் ரூ.20 கொடுத்துள்ளார். இந்த பணம் போதாது என கூறி, திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டு, அவரிடமிருந்த ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர்.
இதை சற்றும் எதிர்பாராத பிரசாந்த், புழல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், வியாசர்பாடி, திருநின்றவூர், பொன்னேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 திருநங்கைககள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.