யாஸ்மின், விவேக், தினேஷ் சவுத்ரி, தேஜராம்

 
க்ரைம்

வீடு மற்றும் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.1.92 கோடி, 90 பவுன் நகைகள் மோசடி: 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வீட்டு வசதி வாரியக் குடி​யிருப்​பில் வீடு ஒதுக்​கீடு மற்​றும் மருத்​து​வக் கல்​லூரி சீட் வாங்​கித் தரு​வ​தாகக் கூறி, ரூ.1.92 கோடி பணம் மற்​றும் சுமார் 90 பவுன் நகைகளை ஏமாற்​றிய கணவன், மனைவி உட்​பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை அடை​யாறு பகுதி​யைச் சேர்ந்​தவர் கோமளவல்லி. இவருக்​குச் செங்​கல்​பட்​டைச் சேர்ந்த யாஸ்​மின் மற்​றும் அவரது கணவர் விவேக் (எ) சின்னா ஆகியோர் அறி​முக​மாகி​யுள்​ளனர்.

சைதாப்​பேட்​டை​யில் உள்ள தமிழ்​நாடு வீட்டு வசதி வாரியக் குடி​யிருப்​பு​கள் மற்​றும் ‘TAISHA’ அடுக்​குமாடி குடி​யிருப்​பு​களில் உள்ள வீடுகளைக் குறைந்த விலைக்​குப் பெற்​றுத் தரு​வ​தாக இந்​தத் தம்​ப​தி​யினர் கோமளவல்​லி​யிடம் ஆசை வார்த்தை கூறியுள்​ளனர்.

இதை நம்​பிய கோமளவல்லி பல்​வேறு தவணைகளாக ரூ.1.80 கோடி பணத்​தையும், 713 கிராம் தங்க நகைகளை​யும் மோசடி கும்​பலிடம் கொடுத்​துள்​ளனர். மேலும், நம்​பிக்​கையை ஏற்​படுத்​து​வதற்​காகப் போலி ஒதுக்​கீடு ஆவணங்​களை​யும் இந்த கும்​பல் காட்​டியுள்​ளது.

இது​மட்​டுமின்றி, கோமளவல்​லி​யின் உறவினர் மகளுக்கு மருத்​து​வக் கல்​லூரி​யில் சீட் வாங்​கித் தரு​வ​தாகக் கூறி தனியாக ரூ.12 லட்​சமும் வாங்​கி​யுள்​ளனர்.

பணம் மற்​றும் நகைகளைப் பெற்​றுக் கொண்ட தம்​ப​தி​யர், கூறியபடி வீடுகளையோ மருத்​து​வச் சீட்​டையோ வாங்​கித் தராமல் ஏமாற்றி, காலம் கடத்தி வந்​துள்​ளனர். தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த கோமளவல்லி, சென்னை மத்​திய குற்​றப்​பி​ரி​வில் புகார் அளித்​துள்​ளார்.

இதையடுத்து, மத்​திய குற்​றப்​பி​ரிவு கூடுதல் ஆணை​யர் அறி​வுறுத்​தலின்​படி, புலனாய்வு பிரிவு காவல் ஆய்​வாளர் தலைமையி​லான தனிப்​படை போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில், முதல்​கட்​ட​மாக, தலைமறைவாக இருந்த முக்​கிய குற்​றவாளி​களான சென்னை பொன்​மார் பகுதி​யைச் சேர்ந்த யாஸ்​மின் (எ) யாமினி, அவரது கணவர் விவேக் (எ) சின்னா ஆகிய இரு​வரை கடந்த 7-ம் தேதி போலீ​ஸார் கைது செய்து நீதி​மன்​றக் காவலில் அடைத்​தனர்.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட தேடுதல் வேட்​டை​யில், இந்த மோசடிக்கு உடந்​தையாக இருந்து தலைமறைவாக இருந்த சென்னை திரிசூலம் பகுதி​யில் நகைக்​கடை நடத்தி வரும் தினேஷ் சவுத்ரி மற்​றும் அவரது தந்தை தேஜராம் ஆகியோரை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT