க்ரைம்

பெண் அதிகாரி புகைப்படத்தை ‘ஏஐ’ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பெண் அதி​காரியை பழி​வாங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் அவரது புகைப்​படத்தை ஆபாச​மாக சித்​தரித்து வெளி​யிட்ட முன்​னாள் பெண் ஊழியர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை வளசர​வாக்​கத்​தில் பிரபல​மான தனி​யார் நிறு​வனம் ஒன்று செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறுவன பெண் அதி​காரி​யின் ஆபாசப் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் வைரலானது.

          

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நிர்​வாகி இது தொடர்​பாக மாநில சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, அப்​பிரிவு டிஜிபி சந்​தீப் மித்​தல் மேற்​பார்​வை​யில் உதவி ஆணை​யர் லிசா தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி சம்​பந்​தப்​பட்ட பெண் அதி​காரி​யின் புகைப்​படத்தை ஆபாச​மாக சித்​தரித்து பரப்​பியது இளம் பெண் ஒரு​வர் என்​பதும், அவர் அதே நிறு​வனத்​தில் கடந்​தாண்டு அக்​டோபரில் வேலையை ராஜி​னாமா செய்​துள்​ளார் என்​பதும், தனது இந்த நிலைக்கு சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​தின் பெண் அதி​காரியே காரணம் என நினைத்து அவரது புகைப்​படத்தை ஏஐ உதவி​யுடன் ஆபாச​மாக சித்​தரித்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அந்த முன்​னாள் பெண் ஊழியரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT