செய்யாறு விவசாயி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் (இடது ஓரம்) உள்ளிட்டோர்.

 
க்ரைம்

விவசாயி கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

மேலும் 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு

செய்திப்பிரிவு

செய்​யாறு: விவசாயி கொலை வழக்​கில் திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு வட்​டம் பெரியசெங்​காடு கிராமத்​தைச் சேர்ந்​தவர் விவசாயி முனு​சாமி(48).

இவருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த பெரு​மாள், இருசப்​பன் ஆகியோ​ருக்​கும் இடையே நிலம் தொடர்​பான முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், 2014 மே 17-ம் தேதி இவர்​களிடையே நிலம் தொடர்​பாக மீண்​டும் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது.

          

அப்​போது, பெரு​மாள், இருசப்​பனுக்கு ஆதர​வாக செங்​காடு கிராமத்​தைச் சேர்ந்த மதி​யழகன்​(35), நந்​தகோ​பால்​(29), சுதாகர்​(35), துரை​முரு​கன்​(39) மற்​றும் வந்​த​ வாசி திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் ஆகியோ​ரும் சேர்ந்​து, முனு​சாமி​யுடன் தகராறில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அவர்​களிடையே ஏற்​பட்ட வாக்​கு​வாதம் மோதலாக மாறியது. இதில், முனு​சாமி, அவரது மனைவி பொன்​னி, உறவினர் அஞ்​சலி ஆகியோரை, பெரு​மாள், இருசப்​பன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் 7 பேர் சேர்ந்து கத்தி உள்​ளிட்​ட​வற்​றால் தாக்​கி​யுள்​ளனர்.

இதில் பலத்த காயமடைந்த முனு​சாமி செய்​யாறு அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காக சென்னை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக் கப்​பட்ட முனு​சாமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர்​ இழந்தார்.

இதுகுறித்து அனக்​காவூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, மதி​யழகன், நந்​தகோ​பால், இருசப்​பன், பெரு​மாள், சுதாகர், துரை முரு​கன், முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் ஆகியோரைக் கைது செய்​தனர்.

இந்த வழக்கு திரு​வண்​ணா​மலை மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி ப.மதுசூதனன், குற்​றம் சுமத்​தப்​பட்ட முன்​னாள் எம்​எல்ஏகமலக்​கண்​ணன் மற்​றும் பெரு​மாள், இருசப்​பன், மதி​யழகன், நந்​தகோ​பால், சுதாகர், துரை​முரு​கன் ஆகியோ​ருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்.

2009-ல் நடை​பெற்ற சட்​டப்​பேரவை இடைத்தேர்​தலில் கமலக்​கண்​ணன் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT