கைதான கலாவதியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார். (அடுத்த படம்) ஜெய் பாலாஜி. | படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

 
க்ரைம்

ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் கைது

என்.சன்னாசி

மதுரை: மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர் அரு​கில் உள்ள கலைநகரில் வசிப்​பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக இருந்​தது முதல் அவரிடம் உதவி​யாள​ராக (பிஏ) இருந்​தார்.

மேலும், மருதம் என்ற பெயரில் ரியல் எஸ்​டேட் தொழிலிலும் செய்து வந்​தார். கடந்த ஓராண்​டுக்கு முன்பு ஜெய் பாலாஜி மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தால், அவரை பணி​யில் இருந்து அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் விலக்​கி​னார்.

          

இந்​நிலை​யில், ஜெய் பாலாஜி, அவரது மனைவி கலா​வதி (42) ஆகியோரை மத்​திய குற்​றப் பிரிவு உதவி ஆணை​யர் வினோ​தினி தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். பின்​னர் இரு​வரை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி​யும் காதலித்து திரு​மணம் செய்​தவர்​கள். கலா​வதி பட்​டயக் கணக்​காள​ராக உள்​ளார். நிதி அமைச்​ச​ராக பழனிவேல் தியாக​ராஜன் பொறுப்​பேற்​றதும், செல்​வாக்கு மிக்க நபராக ஜெய் பாலாஜி வலம் வந்​தார். அமைச்​சரின் பெயரைக் கூறி, மாநக​ராட்சி உட்பட அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பல்​வேறு வேலைகளை அமைச்​சருக்​குத் தெரி​யாமலே செய்து பணம் சம்​பா​தித்​துள்​ளார்.

எச்சரித்து வெளியேற்றினார்... மாநக​ராட்​சி​யில் ஒப்​பந்​தங்​களை இறுதி செய்​வது, வீட்​டுமனை வரைபடங்​களுக்கு அனு​மதி பெற்​றுத் தரு​வது என பல்​வேறு வேலைகளைச் செய்​து, பெரு​மள​வில் பணம் சம்​பா​தித்​தார். அந்​தப் பணத்தை தனது பெயரிலும், மனைவி மற்​றும் பினாமி பெயர்​களில் முதலீடு செய்​துள்​ளார். ஜெய் பாலாஜி​யின் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தெரிய வந்​த​தால் அமைச்​சர் அவரை எச்​சரித்​து, பணி​யில் இருந்து விடு​வித்​தார்.

மதுரை​யில் உள்ள பிரபல கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரிடம் பல்​வேறு வேலைகளைச் செய்து தரு​வ​தாகக் கூறி பொன்​மேனி பகு​தி​யில் ஒரு வீட்டு மனை ரூ.3.50 கோடிக்​குப் பேசி, இரு மனை​களை வாங்​கி, பத்​திரப் பதிவுக்கு மட்​டும் ரூ.77 லட்​சம் செலவு செய்​துள்​ளார்.

மேலும், மாநக​ராட்​சி​யில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்​சம் வரை பெற்​றுள்​ளார். வீட்​டுமனைக்​குரிய தொகை​யை​யும், வேலைகளை முடித்​துத்தர வாங்​கிய பணத்​தை​யும் தராமல் இருந்​துள்​ளார். இதை தட்​டிக்​கேட்ட கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரை ஜெய் பாலாஜி மிரட்​டி​யுள்​ளார்.

மருதம் ரியல் எஸ்​டேட் பெயரில், தவணை முறை​யில் பணம் செலுத்​தி​னால் வீட்டு மனை வழங்​கு​வ​தாக கணவன், மனைவி இரு​வரும் பொது​மக்​களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்​றி​யுள்​ளனர். அமைச்​சரின் பெயரைக் குறிப்​பிட்​டும், ரியல் எஸ்​டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்​துள்​ளது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

கணவன், மனைவி மற்​றும் பினாமிகள் பெயர்​களில் உள்ள அசை​யும், அசையா சொத்​துகளின் ஆவணங்​களைச் சேகரிக்​கிறோம். இந்த சொத்​துகளைப் பறி​முதல் செய்​து, பாதிக்​கப்​பட்​டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

2019-ம் ஆண்​டுக்கு முன்​ன​தாக ஜெய் பாலாஜி பல்​வேறு முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக வழக்​கு​கள் உள்​ளன. கணவரின் முறை​கேடு​களுக்கு அவரது மனைவி உடந்​தை​யாக இருந்​த​தால், அவரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT