இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்.

 
க்ரைம்

193 கிலோ போதைப் பொருள் கடத்திய இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடலில் 193 கிலோ போதைப் பொருட்​களை கடத்தி வந்த, இலங்கையைச் சேர்ந்த 5 பேரை அந்​நாட்டு கடற்​படை​யினர் கைது செய்​தனர்.

சர்​வ​தேச கடல் பகு​தி​யில் போதைப் பொருட்​களை ஏற்​றிச் செல்​லும் படகு​கள் மற்​றும் கப்​பல்​களை செயற்​கைக்​கோள் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி இலங்கை கடற்​படை தொடர்ந்து கண்​காணித்து வரு​கிறது.

இலங்கையின் தெற்கு கடல் பரப்​பான இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தியி​லிருந்து இலங்கை கடல் பகு​திக்​குள் நுழைந்த ஒரு ஆழ்​கடல் மீன்​பிடிப் படகை இலங்கை கடற்படையினர் கைப்​பற்​றி, திக்​கோ​விட்ட மீன்​பிடித் துறை​முகத்​துக்​குக் கொண்டு சென்​றனர்.

படகை ஆய்வு செய்​த​தில் 172 கிலோ ஐஸ் போதைப் பொருள், 21 கிலோ ஹெரா​யின் என மொத்​தம் 193 கிலோ போதைப் பொருட்​கள் இருந்​தன.

அவற்​றைப் பறி​முதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், படகில் இருந்த, இலங்கையைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்​தனர். இதுகுறித்து இலங்கை கடற்​படை​யினர் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT