கைதான சக்​திவேல், சாந்​தகு​மார், ​ராம், ராம்​கு​மார், உதயகிரண்

 
க்ரைம்

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி: தந்தை - மகன் உள்ளிட்ட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: குறைந்த விலைக்கு தங்கம் வாங்​கித் தரு​வ​தாக நம்​ப​வைத்​து, தங்க வியா​பாரி​யிடம் ரூ.63 லட்​சம் மோசடி செய்த வழக்​கில் தந்​தை-மகன் உள்​ளிட்ட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்​னை, அமைந்​தகரை பகு​தி​யில் வசித்து வருபவர் அன்​மோல் ஜெயின் (24). இவர் தனது உறவினர் நமீத் என்​பவருடன் சேர்ந்து மொத்​த​மாக தங்​கம் வாங்கி வியா​பாரம் செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், நமீத் கடந்த 17-ம் தேதி அன்​மோல் ஜெயினை தொடர்பு கொண்​டு, “ஸ்ரீ​ராம் என்​பவர் மூலம் 2 நபர்​கள் குறைந்த விலைக்கு தங்​கம் கொடுப்​ப​தாக கூறி​யுள்​ளனர். நீ அவர்​களை சந்​தித்து தங்​கத்தை வாங்கி வா” என்று கூறி​யுள்​ளார்.

அதன்​படி அன்​மோல் ஜெயின், எழும்​பூர் மெட்ரோ அருகே சென்​றார். அங்​கிருந்த ஸ்ரீ​ராம் என்​பவர் அவருடன் வந்த 2 நபர்​களை சக்​திவேல் மற்​றும் அவரது தந்தை சாந்​தகு​மார் என அறி​முகம் செய்​து​வைத்​தார். மேலும், இவர்​கள் எழும்​பூர் பவுண்​டன் பிளா​சா​வில் கடை வைத்​துள்​ளனர். குறைந்த விலைக்கு தங்​கம் தரு​வ​தாக கூறி​யுள்​ளனர் என்று தெரி​வித்​தார்.

பின்​னர் 4 பேரும் 2 பைக்​கு​களில் எழும்​பூர் பவுண்​டன் பிளாசா சென்​ற​போது, உறவின​ரான நமீத் வேறு ஒரு நபரிடம் கொடுத்​தனுப்​பிய ரூ.63 லட்​சம் பணத்தை அன்​மோல் ஜெயின் பெற்​றுக் கொண்​டு, அந்த பணத்தை சக்​திவேலிடம் கொடுத்து தங்​கத்தை தரு​மாறு கேட்​டார்.

சக்​திவேல் பணத்தை பெற்​றுக் கொண்டு மேலே உள்ள அறை​யில் பணத்தை வைத்​து​விட்டு தங்​கத்தை எடுத்து வரு​வ​தாகக் கூறி பணத்​துடன் சென்​றுள்​ளார்.

சில நிமிடங்​களில் சக்​திவேலின் தந்தை சாந்​தகு​மார், அண்ணா மேம்​பாலம் அருகே உள்ள ஸ்வீட் கடைக்கு போகலாம் தங்​கத்தை மகன் சக்​திவேல் அங்கு எடுத்​து​வரு​வார் எனக் கூறியதன்​பேரில், ஸ்ரீராம் மற்​றும் சாந்​தகு​மார் ஆகியோர் ஒரு பைக்​கிலும், அன்​மோல் ஜெயின் மற்​றொரு பைக்​கிலும் அண்ணா மேம்​பாலம் சென்று கொண்​டிருந்​த​ போது, ஸ்ரீ​ராம் வேக​மாக பைக்கை ஓட்​டிச் சென்று இரு​வரும் மறைந்​துள்​ளனர்.

அன்​மோல் ஜெயின் அண்ணா மேம்​பாலம் அருகே உள்ள குறிப்​பிட்ட ஸ்வீட் கடைக்கு சென்று பார்த்​த​போது, அவர்​கள் அங்கு இல்​லாத​தால், 3 நபர்​களும் சேர்ந்து ஏமாற்றி மோசடி செய்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அன்​மோல் எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து மோசடி​யில் ஈடு​பட்ட பெரம்​பூரைச் சேர்ந்த சாந்​தகு​மார் (61), மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பெரம்​பூரைச் சேர்ந்த ராம்​கு​மார் (22), மாதவரத்​தைச் சேர்ந்த உதயகிரண் (22) ஆகிய 4 பேரை கைது செய்​தனர். இந்த மோசடிக்கு மூளை​யாக செயல்​பட்ட சக்​திவேல் (23) என்​பவரும் பிடிபட்​டுள்​ளார். இவ்​வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT