க்ரைம்

சென்னை | பொதுமக்களிடம் ரூ.77 லட்சம் முதலீடு வசூலித்து மோசடி: நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 77 லட்​சம் வரை முதலீடு​களை வசூலித்து மோசடி​யில் ஈடு​பட்ட நிதி நிறுவன நிர்​வாகி​களுக்கு 4 ஆண்​டு​ கள் சிறை தண்​டனை விதித்து சென்னை சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் ஊரப்​பாக்​கம் ரயில் நிலை​யம் அருகே கிரீன் வேர்ல்டு பவுண்​டேஷன் டிரஸ்ட் என்ற நிதி நிறு​வனத்தை அப்​பகு​தியை சேர்ந்த பிரசன்​னா, கோவையை சேர்ந்த சரவணன், கூடு​வாஞ்​சேரி நந்​திவரத்​தைச் சேர்ந்த நீல​கண்​டன் ஆகியோர் கூட்​டாக நடத்தி வந்​தனர்.

          

அதிக லாபம் தரு​வ​தாகக் கூறி ரூ.77 லட்​சம் வரை முதலீடு​களை வசூலித்த இவர்​கள், உறு​தி​யளித்த தொகையை தராமல், குறைந்த தொகையை திருப்​பிக் கொடுத்​துள்​ளனர்.

இதையடுத்​து, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் அளித்த புகாரின்​பேரில் நிதி நிறுவன நிர்​வாகி​கள் 3 பேர் மீதும் செங்​கல்​பட்டு பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை நிதி நிறுவன மோசடி வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​முரு​கானந்​தம் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் டி.​பாபு ஆஜராகி வாதிட்​டார்.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம்​சாட்​டப்​பட்ட பிரசன்​னா, சரவணன், நீல​கண்​டன் ஆகியோ​ருக்கு தலா 4 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ரூ.13.96 லட்​சம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​துள்​ளார்.

இந்த அபராதத் தொகை​யில் முதலீட்​டாளர்​களுக்கு விகி​தாச்​சார அடிப்​படை​யில் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்​றும், இழப்​பீடு போக மீதித்​தொகை இருந்​தால் அதை அரசின் கணக்​கில் சேர்க்க வேண்​டும், என்​றும் நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT