க்ரைம்

காதல் தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் தந்தை கைது

செய்திப்பிரிவு

தென்காசி: தென்​காசி மாவட்​டம், ஆலங்குளத்​தை சேர்ந்​தவர் ஆகாஷ்.இவர், மேலஅரிய​நாயகிபுரத்​தைச் சேர்ந்த சுஷ்மிதா என்​பவரை காதலித்​து பெண்​ணின்பெற்​றோர் எதிர்ப்பை மீறி, திரு​மணம் செய்தார்.

இரு​வ​ரும் சிவ​காமிபுரத்​தில் வாடகை வீட்​டில் வசிக்​கின்​ற​னர். இந்நிலையில் சுஷ்மி​தா​வின் தந்தை முரு​கன் வீட்டுக்கு வந்து தம்பதியரை வெட்​டி​விட்டு தப்​பினார்.

இதில் பலத்த காயமடைந்த இரு​வ​ரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் பாவூர்​சத்​திரம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, முரு​க​னை கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT