க்ரைம்

ஊத்தங்கரை அருகே விவசாயி படுகொலை: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

தனியாக வசித்த முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்த விவ​சா​யியைக் கொன்​று, அவரது மனை​வியை பாலியல் வன்​கொடுமை செய்த மர்ம நபரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்தங்கரை சிங்​காரப்​பேட்டை அருகே ஓபகாவலசை கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி கண்​ணப்​பன் (70). இவரது மனைவி சென்​னம்​மாள் (61). இத்​தம்​பதி தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தனர்.

          

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கண்​ணப்​பன் வீட்​டின் வெளி​யே​யும், சென்​னம்​மாள் வீட்​டின் உள்​ளே​யும் உறங்​கிக் கொண்​டிருந்​தனர். இரவு 11 மணி​யள​வில் வீட்​டுக்கு வந்த மர்ம நபர் கண்​ணப்​பனின் தலை​யில் கல்லை தூக்​கிப் போட்​டார்.

அவரது அலறல் சத்​தம் கேட்டு வெளியே வந்த சென்​னம்​மாளை மர்ம நபர் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இவர்​களின் அலறல் சத்​தம் கேட்டு அரு​கில் வசிப்​பவர்​கள் வரு​வதைப் பார்த்​ததும் மர்ம நபர் அங்​கிருந்து தப்​பிச் சென்​றார்.

இதையடுத்​து, படு​கா​யம் அடைந்த கண்​ணப்​பன் மற்​றும் சென்​னம்​மாளை மீட்​டு, ஊத்தங்கரை அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​குச் சேர்த்​தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்​ணப்​பன் உயி​ரிழந்​தார்.

சென்​னம்​மாள் மேல் சிகிச்​சைக்​காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். தகவல் அறிந்து நிகழ்​விடத்​துக்கு வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தங்​கதுரை, துணை காவல் கண்​காணிப்​பாளர் ராமமூர்த்தி உள்​ளிட்​டோர் விசா​ரணை நடத்​தினர்.

தடய​வியல் நிபுணர்​கள் வீட்​டில் குற்​ற​வாளி​யின் கைரேகைகளைப் பதிவு செய்​தனர். மேலும், மோப்​ப ​நா​யும் வரவழைக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக சிங்​காரப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT