க்ரைம்

சென்னையில் சுத்தியலால் அடித்து பெண்ணை கொலை செய்த முதியவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, அண்​ணாநகர், அன்னை சத்யா நகர் 11-வது தெரு​வைச் சேர்ந்​தவர் சாந்தி (54). சேலை வியா​பாரம் செய்து வந்​தார். இவரது கணவர் இறந்​து​விட்ட நிலை​யில், ராஜேந்​திரன் (68) என்​பவருடன் திரு​மணம் செய்து கொள்​ளாமல் இணைந்து வாழ்ந்து வந்​தார்.

இந்​நிலை​யில், சாந்தி நடத்​தை​யின் மீது சந்​தேகப்​பட்​டு, அண்மைக் கால​மாக ராஜேந்​திரன் தகராறு செய்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்​று​முன்​தினம் இரவு சாந்​தி​யிடம், மீண்​டும் தகராறில் ஈடு​பட்​டுள்​ளார். தகராறு முற்​றவே சாந்​தியை சுத்​தி​ய​லால் ராஜேந்​திரன் தாக்கி உள்​ளார்.

இதில், தலை​யில் பலத்​த காயமடைந்த சாந்​தி, சம்பவ இடத்​திலேயே இறந்​தார். இதைப் பார்த்து அதிர்ச்​சி​யடைந்த ராஜேந்​திரன், அண்ணாநகர் காவல் நிலை​யத்​தில் சரணடைந்து நடந்த சம்​பவத்தை கூறி​னார்.

இதையடுத்​து, போலீ​ஸார் அவரை கைது செய்​தனர். மேலும், சம்பவ இடம் விரைந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இக்​கொலை தொடர்​பாக, தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT