சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலைய வளாகத்தில் பழைய விமான நிலைய கார்கோ பகுதியில், ஒரு பார்சல் கேட்பாரற்று இருந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு படை வீரர்கள், அது வெடிபொருள் இல்லையென உறுதி செய்த பின் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சோதித்ததில் பவுடர் போன்ற பார்சல் இருந்தது. அதை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில், அது போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.