கொலை செய்யப்பட்ட பிச்சைமுத்து, சந்திரா, கைது செய்யப்பட்ட ஐயப்பன்

 
க்ரைம்

பணம் தர மறுத்ததால் தாத்தா, பாட்டி கொலை: போதைக்கு அடிமையான பேரன் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர்: திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே உள்ள காரக்​கோட்​டையைச் சேர்ந்​தவர் கலியபெரு​மாள்​(58), வெளி​நாட்​டில் வேலை பார்த்து வரு​கிறார். இவரது மனைவி தேவி(50).

இவர்​களது மகன் ஐயப்​பன்​(32). பொறி​யியல் பட்​டப்​படிப்பு படித்​துள்ள இவர், வேலைக்கு செல்​லாமல் இருந்​துள்​ளார். மதுப்​பழக்​கத்​துக்கு அடிமை​யான ஐயப்​பனுக்கு கஞ்சா பழக்​க​மும் இருந்​துள்​ளது.

இதன் காரண​மாக, திரு​வாரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் கடந்த 20 நாட்​களாக சிகிச்​சை​யில் இருந்த ஐயப்​பன், 2 நாட்​களுக்கு முன்​னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்​பி​னார்.

இந்​நிலை​யில், அதே ஊரில் வசிக்​கும் தனது தாத்தா பிச்​சை​முத்து, பாட்டி சந்​திரா வீட்​டுக்கு நேற்று முன்​தினம் இரவு சென்ற ஐயப்​பன் பணம் கேட்டு தகராறு செய்​துள்​ளார். இதை அறிந்த அவரது தாயார் தேவி, ஐயப்​பனை சமா​தானம் செய்​து, தனது வீட்​டுக்கு அழைத்​து சென்​றுள்​ளார்.

அதன்​பின், பிச்​சை​முத்து வீட்​டுக்கு நேற்று அதி​காலை 5 மணி அளவில் சென்ற ஐயப்​பன், அங்கு தூங்கிக் கொண்​டிருந்த பிச்​சை​முத்​து, சந்​திரா ஆகியோர் மீது அங்​கிருந்த நாற்​காலியை தூக்கி அடித்​துள்​ளார்.

இதில், இரு​வரும் மயங்​கி​விட்​டனர். அதன் பின்​னர், வீட்​டிலிருந்த தேங்​காய் எண்​ணெயை இரு​வர் மீதும் ஊற்றி எரித்​துள்​ளார்.

தகவலறிந்த வடு​வூர் போலீ​ஸார் அங்கு சென்​று, வீட்​டுக்​குள் எரிந்​தநிலை​யில் இறந்​து கிடந்த பிச்​சை​முத்​து, சந்​திரா ஆகியோரின் உடல்​களை மன்​னார்​குடி அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேத பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர்.

பின்​னர், ஐயப்​பனை கைது செய்தனர். தாத்​தா, பாட்​டியை பேரன் எரித்​துக்​கொன்ற சம்​பவம் மன்​னார்​குடி பகு​தி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT