க்ரைம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை தூக்கு

டெக்ஸ்டர்

தருமபுரி: ​பாலியல் வன்​கொடுமை செய்து சிறு​வனை கொலை செய்த வழக்​கில் இளைஞருக்கு இரட்டை தூக்கு தண்​டனை விதித்து தரு​மபுரி போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

தரு​மபுரி பகுதி கிராமத்​தைச் சேர்ந்​தவர் 7 வயது சிறு​வனை, அதே பகு​தி​யைச் சேர்ந்த வெல்​டிங் தொழிலா​ளி​யான பிர​காஷ் (22) என்​பவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பாலியல் வன்​கொடுமை செய்​து கொலை செய்தார். இந்த வழக்கு விசா​ரணை நிறைவுற்ற நிலையில் தரு​மபுரி போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பளித்தது.

அதில் பிர​காஷுக்கு பாலியல் வன்​கொடுமை மற்றும் கொலைக்கு தலா ஒரு தூக்கு தண்டனை வீதம் இரட்டை தூக்கும் ரூ.40 ஆயிரம் அபராத​மும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்​பளித்​தார். மேலும், இந்த சம்​பவத்​தில் இந்​திய தண்​டனைச் சட்ட பிரிவு 201 மற்​றும் 363 ஆகிய​வற்​றுக்​காக குற்​ற​வாளிக்கு 5 ஆண்டு கடுங்​காவல் தண்​டனை மற்​றும் ரூ.10 ஆயிரம் அபராத​மும், அபராதம் கட்​டத் தவறி​னால் கூடு​தலாக ஓராண்டு கடுங்​காவல் தண்​டனை விதிக்​கப்​படும் எனவும் தீர்ப்​பில் நீதிபதி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT