க்ரைம்

வால்பாறை | ஹோட்டல் உரிமையாளர்களை தாக்கிய திமுக நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

வால்பாறை: கோவை மாவட்​டம் வால்​பாறை பன்​னிமேடு எஸ்​டேட்​டைச் சேர்ந்​தவர் சுரேஷ். இவரது தம்பி மதன்​கு​மார். இரு​வரும் வால்​பாறை நகரில் ஹோட்டல் நடத்தி வரு​கின்​றனர்.

கடந்த 17-ம் தேதி சுரேஷ் மற்​றும் மதன்​கு​மார் வால்​பாறைக்குகாரில் சென்​றுள்​ளனர். அப்​போது நல்​ல​காத்து எஸ்​டேட்​டைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமை​யாளர் சதீஷ்கு​மார்​(33) என்​பவர் இரு​வரை​யும் வழிமறித்து தகராறு செய்​துள்​ளார்.

பின்​னர் தகாத வார்த்​தைகளால் பேசி, கட்​டை​யால் தாக்கி கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். காயமடைந்த இரு​வரும் வால்​பாறை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வால்​பாறை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, ஹோட்டல் உரிமை​யாளர்​களைத் தாக்கி கொலை மிரட்​டல் விடுத்த சதீஷ்கு​மாரைக் கைது செய்​தனர். சதீஷ்கு​மார், வால்​பாறை நகர திமுக இளைஞரணி துணை அமைப்​பாள​ராக உள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT