மயிலாடுதுறை: மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கற்பகத்தை எதிர்வீட்டில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தடுக்க முயன்ற கணவர் செல்வம், மகன் கவியரசன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அசோக்குமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அசோக்குமார் திமுக நகராட்சி கவுன்சிலரான ஜெயலட்சுமி முருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.