க்ரைம்

டிஜிட்டல் கைது மோசடி: முதியவரிடம் ரூ.50 லட்சம் பறித்தவர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: டிஜிட்​டல் கைது என மிரட்​டி, முதி​ய​வரிடம் ரூ.48.80 லட்​சம் மோசடி செய்த வேலூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்​துக்​குடி மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த 61 வயது முதி​ய​வரின் செல்​போனில் பேசிய மர்ம நபர்கள், குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் என தன்னை அறிமுகம்

செய்​துள்​ளார். மேலும், பயங்​கர​வா​தி ஒருவரின் செல்போன் எண், முதி​யவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும், இது தொடர்​பாக விசா​ரணைக்கு ஆஜராகுமாறும் அச்சுறுத்தியுள்ளார்.

அதிர்ச்​சி​யடைந்த முதி​ய​வர், தன்னை விடுவிக்க உதவு கோரியுள்​ளார். இதை பயன்​படுத்​தி மர்மநபர்கள் ரூ.48.80 லட்​சம் பணத்​தை, 3 தவணை​களாக பெற்​றுக் கொண்​டனர். இதுகுறித்​து, தூத்​துக்​குடி மாவட்ட சைபர் குற்​றப்​பிரிவு போலீ​ஸில் முதி​ய​வர் புகார் அளித்​தார். அதன்பேரில் வேலூர் ஆர்​.என்​.​பாளை​யத்தைச் சேர்ந்த சாபுதீன் என்​பவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT