க்ரைம்

சென்னை: 2 வயது குழந்தை உயிரிழப்பு - போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: கொடுங்​கையூர் முத்​தமிழ் நகரைச் சேர்ந்த இளம்​பெண் கஷியா (21). இவரது கணவர் சையத் நயாப்​ஜனி வெளிநாட்டில் வேலை செய்​வ​தாக கூறப்​படு​கிறது.

குடும்​பப் பிரச்​சினை காரண​மாக கடந்த ஆண்​டில் கணவரைப் பிரிந்த கஷியா, தனது 2 வயது குழந்தை அதியா பாத்​தி​மாவுடன் தனியாக வசித்து வந்​தார். நேற்று முன்​தினம் மதி​யம் குழந்தைக்கு சாப்​பாடு கொடுத்து தூங்க வைத்​து​விட்டு கஷியா வீட்டு வேலைகளில் ஈடு​பட்​டுள்​ளார். மாலை​யில் எழுப்​பச் சென்றபோது, குழந்தை அசைவின்றி இருந்​துள்​ளது.

அதிர்ச்​சி​யடைந்த கஷியா, உடனடி​யாக குழந்​தையை ஸ்​டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். அங்கு பரிசோதித்த மருத்​து​வர்​கள், குழந்தை ஏற்​கெனவே இறந்துவிட்டதாகத் தெரி​வித்​தனர்.

இது​குறித்து மருத்​து​வ​மனை கொடுத்த தகவலின்​பேரில், கொடுங்கையூர் போலீ​ஸார் குழந்​தையின் உடலைக் கைப்​பற்றி உயி​ரிழப்​புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT