எஸ்.பி ஜெயக்குமார்

 
க்ரைம்

பவாரியா கொள்ளையனை பிடித்தது எப்படி? - ராஜஸ்தான் நினைவுகளை பகிர்ந்த கடலூர் எஸ்.பி ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

கடலூர்: கடந்த 2005-ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம். பெரியாபாளயம் அடுத்த தானாக்குளத்தில் தனது வீட்டில் இருந்த போது பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அந்தக் கொள் ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களை பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஐ.ஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப் படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் 9 பேரை கைது செய்தனர். இதில் இருவர் உயிரிழந்து விட்டனர். 3 பேர் தலைமறைவாகி விட்டனர். இதனை தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கொள்ளையர்கள் ஜெகதீஸ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கும் நேற்று முன் தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் 9 பேரில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அசோக்கை பிடிப்பதில் தற்போதய கடலூர்மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமாரின் பங்குமுக்கியமானதாக இருந்துள்ளது.

கொள்ளையர்களான பவா ரியாக்கள் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது.

அப்போது திருக்கோவிலூர் டிஎஸ்பியாக இருந்த தற் போதைய கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் மற்றும் அவரது குழு ராஜஸ்தானின் பரத்பூரிலும், திருவள்ளூர் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் அவரது குழு ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்வாலாவிலும், ஓசூர் டிஎஸ்பி அருள் அரசு மற்றும் அவரது குழு ஆக்ராவிலும், மாதவரம் டிஎஸ்பி டாக்டர் சுதாகர் தன் குழுவுடன் பஞ்சாப்புக்கும் சென்று விசாரணை நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.

திருமணமான புதிதில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று ஐ.ஜி ஜாங்கிட் தலைமையிலான குழுவில் திருக்கோவிலூரில் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயக்குமார் இதற்கான பணியில் இணைந்தார். 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அங்கு தங்கி குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அசோக் என்ற குற்றவாளியை பிடிக்கச் சென்ற தானும், தன்னுடன் வந்த 15 போலீஸாரும் கடும் இன்னல்களை எதிர் கொண்டதாக நேற்று கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் தெரி வித்தார். “கொள்ளையன் அசோக்கை நாங்கள் பிடிக்கச் செல்லும் போது, அந்த கிராமமே திரண்டு துப்பாக்கி, இரும்புக் கம்பிபோன்ற பயங்கர ஆயுதங் களுடன் எங்களைத் துரத்தியது. அவர்களிடம் இருந்து சாமர்த் தியமாக தப்பினோம்.

மறுமுறை சென்ற போது, சுற்றி வளைத்து கொள்ளையன் அசோக்கை சரண் அடைய நிர்பந்தம் செய்தோம். அப்போதும் அங்கிருந்த கிராம மக்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்த போது தைரியமாக எதிர்கொண்டோம். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அசோக்கைப் பிடித்தோம்.

அங்குள்ள ரயில் நிலையம் அருகில் காரிலேயே 7 நாட்கள் தங்கி குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, அவர்களின் நோட்டத்தை கண்காணித்து தகவல் சேகரித்தது எல்லாம் தற்போது நினைவு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

பழைய நினைவுகளை நினைவு கூர்கிறேன்; இந்த பணியை செய்ய வாய்ப் பளித்த தமிழக காவல்துறைக்கு கடமைப் பட்டிருக்கிறோம். மேலும் அப்போது என்னோடு இணைந்து திறம்பட பணி யாற்றிய மதிவாணன், நீதிராஜன், புகழேந்தி (ஓய்வு பெறும் போது ஏடிஎஸ்பிகள் தகுதியில் ) மற்றும் பிற காவல் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினரை இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்” என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT